Press "Enter" to skip to content

ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்க ஏன் கட்டுப்பாடுகள் கொண்டுவரக் கூடாது?: உயர்நீதிமன்றம்

தனி நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தனி நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க கட்டுப்பாடுகள் ஏன் கொண்டுவரக்கூடாது என கேள்வி எழுப்பினர்.
மேலும், நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன? தனி நபர் வாங்கும் இரண்டாவது வீட்டிற்கான பத்திரப்பதிவு, வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம் என அனைத்தையும் ஏன் இரண்டு மடங்காக உயர்த்தக் கூடாது? என பல கேள்விகளை அடுக்கினர்.

மத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு’ திட்டம் எப்போது முழுமையாக நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மார்ச் 6-க்குள் பதிலளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு: உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »