Press "Enter" to skip to content

7 பேரை விடுவிக்க ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்: மத்திய அரசு தகவல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நான் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில், கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு இதுவரை தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. என்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக சிறையில் வைத்துள்ளதால், நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்தவும், விடுதலை செய்யவும் உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
காலணியை கழட்ட சொன்ன சர்ச்சை: சிறுவன் குடும்பத்தோடு அமைச்சர் பேச்சுவார்த்தை
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நளினி உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை 2018-ஆம் ஆண்டிலேயே நிராகரிக்கப்பட்டு விட்டது எனக் குறிப்பிட்ட மத்திய அரசு நளினி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் பேரறிவாளன் மனு மீதும் ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் எனவும் தெரிவித்தது.

இதையடுத்து சட்ட விரோத காவலில் இருப்பதாகவும் தன்னை விடுவிக்கக்கோரியும் நளினி தொடர்ந்த வழக்கை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய்..!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »