Press "Enter" to skip to content

வாக்கி டாக்கி முறைகேடு – காவல்துறை அதிகாரிகள் வீட்டில் ரெய்டு

தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல்துறையினரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து, 11 வினாக்களை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார்.
டிசம்பரில் ரன்பீர் கபூர் – அலியா பட் திருமணம்? 
அதில் வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரிய மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83.45 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது என புகார் எழுந்தது. இதுகுறித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய காவல்துறையினருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கொரோனா அவசரநிலையை திரும்பப் பெற்றது கேரள அரசு 
அப்போது பொறுப்பிலிருந்த எஸ்பி, டிஎஸ்பி வீடுகளிலும், சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள டிஎஸ்பி வீடு உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »