Press "Enter" to skip to content

விடுமுறைநாளில் களைகட்டிய மதுபான விற்பனை: காத்திருந்து வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்

மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும், கொரட்டூரில் காவல்நிலையம் அருகே மதுபான கடையில் விற்பனை களைகட்டியது. நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுவை வாங்கிச் சென்றனர்.
வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மது விற்கக்கூடாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. உத்தரவை மீறி மது விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், சென்னையில் பல பார்களில் நேற்று தங்கு தடையின்றி மது விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகின்றது. குறிப்பாக, கொரட்டூர் பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் காலை 7.30 மணி முதல் மது விற்பனை அதிக விலைக்கு விற்கப்பட்டது. மது பிரியர்களும் ஆர்வமுடன் காலை முதல் மது அருந்தி வந்தனர்.
        

சேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் ! 

மதியம் 12 மணி முதல் இரவு பத்து மணி வரை விற்பனைக்கு நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், 24 மணி நேரமும் இந்தப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மறைமுகமாக பல இடங்களில் மது விற்பனை செய்து வந்த நிலையில், கொரட்டூர் காவல்நிலையம் அருகே ரெட்டி சுடுகாடு பகுதியில் உள்ள ராயல் பார் ஒன்றில் அனைவருக்கும் தெரியும் படி கடையில் வைத்தே மது விற்பனை நடந்தது.
       

உச்சக் கட்ட போதை… உணர்வில்லாத நிலை : பேருந்து நிலைய சாக்கடைக்குள் ‘குடி’மகன் ! 

இரு மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும், திருவிழா போல மதுப் பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இதில் இரு தரப்பினருக்கிடையே மோதலும் ஏற்பட்டுள்ளது. இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அக்கம்பக்கம் வீடுகள் உள்ள நிலையில் விடுமுறை தினத்தில் மதுவை சாலைகளில் நின்று குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர். மற்ற நாட்களில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்வதால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை என்றும் காவல்துறை அதிகாரிகளும், கலால் காவல்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »