Press "Enter" to skip to content

‘ஆணாக வாழ விடுங்கள்’ : அடம்பிடிக்கும் திருமணமான இளம் பெண்.. விரக்தியில் தாக்கிய தந்தை

திருநம்பியாக உள்ள தன்னை தனது தந்தை கொலை செய்ய முயற்சிப்பதாக இளம் பெண் காவல்துறையில் புகாரளித்துள்ளார். தந்தை தாக்கியதால் காயமடைந்த அவர் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி தருவைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பொன்மாடசாமி. இவரது மகள் பொன்மாரி செல்வி (25). இவர் செவிலியர் படிப்பு முடித்துவிட்டு தூத்துக்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். பெண்ணாக பிறந்திருந்தாலும் ஆண் தன்மையுடன் இருந்த பொன்மாரி செல்வி, ஆண்கள் போன்று தலைமுடி வைத்துக் கொண்டும், ஆண்கள் அணியும் உடைகளையே பயன்படுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது.

கேஜிஎஃப் 2 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை 
ஆரம்பத்தில் இருந்து மகளின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது தந்தை பொன்மாடசாமி, அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அந்தச் சூழலில் பொன்மாரி செல்வி தான் ஆண் தன்மையுடன் இருப்பதால் தனக்கு வேறு ஆணுடன் திருமணம் செய்து வைக்கவேண்டாம் என்று அவரது பெற்றோரிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொன்மாரிச் செல்வியை கட்டாயப்படுத்தி கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
திருமணமான நாள் முதலே பொன்மாரி செல்வி கணவருடன் வாழ விருப்பமில்லாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், அவர்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், மூன்று மாதத்தில் அந்த குழந்தை இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கணவருடன் வாழ மறுத்து அவர் விவகாரத்து கோரியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தை அவரை வீட்டில் சிறைப்படுத்தி தாக்கியதாக பொன்மாரி செல்வி இப்போது காவல்துறையில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.

இதனையடுத்து, வீட்டிலிருந்து தப்பித்து, பொன்மாரி செல்வி மதுரையில் திருங்கைகளுக்காக செயல்படும் பாரதி கண்ணமா அறக்கட்டளை நிறுவனர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். அவரது தந்தை தாக்கியதில் பொன்மாரி செல்விக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் எலும்பு மூட்டு பிரிவில் அவர் நேற்று இரவு சிகிச்சைக்காக உள்நோயளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தனது தந்தை பொன்மாடசாமியால் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் காவல்துறையினர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும், மேலும் திருநம்பியாக உள்ள தனக்கு படித்ததற்கேற்ற பணியை அரசு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »