Press "Enter" to skip to content

சாலையோரம் நின்ற சிறுவர்கள் : தேரை நிறுத்தி இனிப்பு வழங்கிய முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறுவர்களுக்காக காரை நிறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் முதலமைச்சர் பழனிசாமி தனது காரில் சென்றுகொண்டிருக்கிறார். அப்போது சாலையோரம் நிற்கும் சிறுவர்-சிறுமிகள் அவரை பார்த்து கை அசைத்து வரவேற்கின்றனர். அவர்களுடன் சிலர் சேர்ந்து நிற்கின்றனர். இதைக்கண்ட முதலமைச்சர் தனது காரை சாலையோரம் நிறுத்தச் சொல்லி, அந்தச் சிறுவர்களை அருகே அழைக்கிறார்.
கோலி.. பும்ரா.. சொதப்பல் : தோல்விக்கு காரணம் இதுதானா ?

அத்துடன் அவர்களுக்கு சாக்லெட்டுகளையும் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் முதலமைச்சருடன் செல்ஃபி உள்ளிட்ட புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர். இதனை வீடியோவாகவும் அங்கிருந்த சிலர் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
‘மாஸ்டர்’ படக்குழுவின் காதலர் தின பரிசு – ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் வெளியீடுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »