Press "Enter" to skip to content

‘வன்முறையைத் தூண்டும் பேச்சு’ – 2 ஆண்டுகளுக்குப் பின் சீமான் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
காமராஜர் நினைவு நாளையொட்டி 2018ஆம் ஆண்டு கிண்டி காமராஜர் நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சீமான் மீது கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 
இருபிரிவினரிடையே அமைதியை சீர்குலைப்பது, உள்நோக்கத்தோடு தவறான தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
“காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல” – ஏ.ஆர்.ரஹ்மான் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »