Press "Enter" to skip to content

கேரள‌ வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டுபிடிப்பு

கேரள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து, தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவின் வயநாடு அருகே கம்பமலை என்ற கிராமத்தில் 7 பேர் கொண்ட மாவோயிஸ்ட் குழு நுழைந்ததாக, அம்மாநில நக்சல் தடுப்பு அதிரடிப்படைக்கு தகவல் கிடைத்தது. மலைவாழ் மக்களை சந்தித்த மாவோயிஸ்ட்டுகள், அரசுக்கெதிரான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு சூரியமுடி மலைப்பகுதிக்குள் சென்றுவிட்டதாகவும் தெரியவந்தது.

இலவசங்கள் அறிவிப்பு: சமூக முன்னேற்றத்திற்கா ? வாக்கு அரசியலுக்கா ?
அந்தப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வரும் கேரள நக்சல் தடுப்பு அதிரடிப்படையினர், தமிழக அதிகாரிகளையும் உஷார்படுத்தியுள்ளனர். மாவோயிஸ்ட்டுகள் வனப்பகுதியின் வழியே தமிழகத்திற்குள் நுழையக் கூடும் என்பதால், எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

CMDA-வில் வேலை – விண்ணப்பிக்கத் தயாரா ?
முள்ளி, பட்டிசாலை, மாங்கரை ஆகிய சோதனைச்சாவடிகளில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் நிறுத்தப்பட்டு, அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகள் சோதனையிடப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »