Press "Enter" to skip to content

இப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..!

இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் 2020 தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் (CBIC) சுமார் 2500 ஏற்றுமதியாளர்களுக்கு தர வேண்டிய 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒருகிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியை திரும்ப பெறுவதை தடை செய்துள்ளது.

ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டு அந்த உற்பத்தியில் தொடங்கி விற்பனை வரை பல்வேறு நிலைகளில் வரி மேல் வரி விதிக்கப்படுகிறது. எனினும் இதில் கட்டிய வரிகளில் பல நிலைகளில் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது. இது மத்திய அரசின் ஒரு முக்கிய பொறுப்பாகும். ஆனால் அப்படி திருப்பிச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரி ரீபண்ட் தொகையில் பல லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது.

இதில் சில பிரச்சனைகளும் உண்டு. என்னவெனில் சில வர்த்தகர்கள் போலி பில்கள் மூலம், தங்களது வரிகளை திரும்ப பெறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் இதில் உண்மையான வர்த்தகர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக ஏற்றுமதியாளர்களின் சரிபார்ப்பை சரியான நேரத்தில் விரைவில் மேற்கொள்ளுமாறும் சிபிஐசி தனது அலுவலக பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

imageBudget 2020: அரசு எதிர் கொள்ள இருக்கும் பட்ஜெட் சவால்கள்..!

இது குறித்து ஜனவரி 23 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சிபிஐசி கொள்கை பிரிவு அதன் கமிஷ்னர்களிடம் நிதி வெளியீட்டுக்கான சரிபார்ப்பு முறைகளை விரைவில் முடிக்கவும், விரைவில் ரீபண்ட் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொருட்கள் ஏற்றுமதியில் மோசடி மூலம் ஐஜிஎஸ்டி திரும்ப பெறும் பல வழக்குகள் கடந்த சில மாதங்களாக பல வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. எனினும் சரி பார்ப்பில் பல ஏற்றுமதியாளர்கள் இந்த மோசடியில் ஈடுபடவில்லை என்றும் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிஜிஎஸ்டி அலுவலத்தின் இந்த தகவல் சரிபார்ப்பு, ஏற்றுமதியாளரால் தகவல்கள் அளித்த 14 வேலை நாட்களில் மேற்கொள்ளப்பட வேன்டும் என்றும் வாரியம் அறிவுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. அவ்வாறு குறிப்பிட்ட நாட்களுக்குள் இந்த சரிபார்ப்பு முடிக்காவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற புகார்கள் வந்தவுடன் அடுத்த ஏழு வேலை நாட்களில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »