Press "Enter" to skip to content

இந்த வருமான வரி மாற்றங்கள் வரவு செலவுத் திட்டம் 2020-ல் வருமா..?

இன்னும் இரண்டு நாள் தான். அடுத்த 2020 – 21 நிதி ஆண்டுக்கான, பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் பல தொழில் துறை தரப்பினர்கள், வியாபாரிகள், சேவைத் துறையில் வியாபாரம் செய்பவர்கள் என பலரும் தங்கள் தேவைகளையும் கோரிக்கைகளையும் முன் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நம்மைப் போன்ற நடுத்தர சம்பளதாரர்களுக்கும், சராசரி மனிதர்களுக்கும் எல்லாம், வருமான வரி தானே பட்ஜெட்டில் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த வருமான வரி பற்றி பல அனலிஸ்டுகள், வரித் துறை நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் என பலரும் தங்கள் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

ப்ரைஸ் வாட்டர் கூப்பர் ஹவுஸ் (PwC – Price Water Cooperhouse) என்கிற முன்னணி ஆடிட்டிங் நிறுவனத்தில், வருமான வரிப் பிரிவில் நிபுணராக இருக்கும் குல்தீப் குமார், இந்த பட்ஜெட்டில் என்ன மாதிரியான வருமான வரி மாற்றங்கள் வரலாம், வந்தால் நன்றாக இருக்கும் என தன் கருத்தைப் பகிர்ந்து இருக்கிறார்.

வரி வரம்பு

தற்போது

1 ரூபாய் – 2.5 லட்சம் ரூபாய் வரி இல்லை

2.5 லட்சம் – 5 லட்சம் ரூபாய் 5% வரி

5 லட்சம் – 10 லட்சம் ரூபாய் – 20% வரி

10 லட்சம் ரூபாய்க்கு மேல் – 30% வரி வசூலிக்கப்படுகிறது.

இந்த வரம்பை கீழ் காணும் முறையில் மாற்றலாம் என்கிறார்.

பரிந்துரைக்கும் வரி வரம்பு

1 – 5 லட்சம் ரூபாய் வரி இல்லை

5 – 10 லட்சம் ரூபாய் 10% வரி

10 – 20 லட்சம் ரூபாய் 20% வரி

20 லட்சத்துக்கு மேல் 30% வரி என விதிக்கச் சொல்கிறார்.

80 சி வரிச் சலுகை

வருமான வரி செலுத்துபவர்களுக்கு, இந்த 80 சி பற்றித் தெரிந்து இருக்கும். லைஃப் இன்சூரன்ஸ், பி எஃப், சில வகை மியூச்சுவல் ஃபண்ட், செல்வ மகள் சேமிப்புத் திட்டம், 5 வருட பேங்க் டெபாசிட், வீட்டுக் கடனுக்குத் திருப்பிச் செலுத்திய முதல் தொகை, தேசியம் சேமிப்புச் சான்று… என பல வழிகளில் 1.5 லட்சம் ரூபாயை கணக்குக் காட்டி வரிக் கழிவு பெறலாம். இந்த இந்த 80சி பிரிவின் வரம்பை 1.5 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தச் சொல்கிறார் குல்தீப் குமார்.

imageபலம் பெற்ற கொரோனா.. மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு.. இனி எப்போது தான் குறையும்..!

இவர் சொல்லும் ஐடியாவைக் கேட்கும் போதும் சூப்பராக இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தை இந்த பட்ஜெட்டில் சொல்லுமா மத்திய அரசு..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »