Press "Enter" to skip to content

பலம் பெற்ற கொரோனா.. மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு.. இனி எப்போது தான் குறையும்..!

சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் உலக நாடுகளே அச்சம் கண்டுள்ளன. பரவும் தொற்று நோய் ஒரு புறம் எனில், மறுபுறம் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

இதனால் உலக முதலீட்டாளர்களின் பாதுக்காப்பு மையமான தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.

ஒரு புறம் மிகப்பெரிய பொருளதார நாடான சீனாவில் பொருளாதார வீழ்ச்சி, மறுபுறம் தங்கம் பயன்பாடு வீழ்ச்சி என இருந்தாலும், இவையெல்லாவற்றையும் மற்ற உலக நாடுகள் பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் மீது விழுந்துள்ளது.

அந்தோ பரிதாபத்தில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க்.. கதறும் முதலீட்டாளர்கள்..!

தங்கம் விலை அதிகரிப்பு

தங்கம் விலை அதிகரிப்பு

இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் மீது அதிகரித்து வரும் முதலீடு காரணமான, தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. சொல்லப்போனால் சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு தற்போது 1577.75 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய வர்த்தகத்தில் 1576.70 டாலர்களாக முடிவடைந்த நிலையில் இன்று அதிகபட்சமாக 1580.35 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய சந்தையில் எப்படி

இந்திய சந்தையில் எப்படி

இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 265 ரூபாய் ஏற்றம் கண்டு 10 கிராம் தங்கத்தின் விலையானது 40,615 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய வர்த்தக முடிவில் தங்கத்தில் விலையானது 40,350 ரூபாயாக முடிவடைந்திருந்த நிலையில் தற்போது 40615 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலையானது 3,839 ரூபாயாகவும், சவரன் ஆபரண தங்கத்தின் விலையானது 30,712 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தாக்கம் ஏற்படலாம்

தாக்கம் ஏற்படலாம்

கொரோனா வைரஸ் பயத்தின் மத்தியில் உலகளாவிய விகிதங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவிலும் தங்கம் வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளன. மேலும் கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூறியதையடுத்து, இன்று தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்த வண்ணமே வர்த்தகமாகி வருகிறது.

பாதிப்பு அதிகரிக்கும்

பாதிப்பு அதிகரிக்கும்

கொரோனா வைரஸின் தாக்கத்தால் தற்போது 170 பேர் இறந்துள்ள நிலையில், தற்போது பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதனால் இறப்பு விகிதமானது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேவையை பொறுத்து விலை மாறுபடும்

தேவையை பொறுத்து விலை மாறுபடும்

எப்படி எனினும் இது நுகர்வோர் வாங்கும் ஆபரண தங்கத்தின் விலையில் பிரதிபலிக்க கொஞ்சம் நேரம் எடுக்கும் என்றும் உலக தங்க கவுன்சில் அதிகாரி ப்ளும்பெர்க்கிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்திய சந்தைகளில் தங்கம் தேவையை பொறுத்தே ஆபரண தங்கத்தின் விலையும் மாறுபடும் என்றும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »