Press "Enter" to skip to content

மீண்டும் 31 ஆயிரத்தை தாண்டிய ஆபரணத் தங்கத்தின் விலை..: சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.256 உயர்வு!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை, சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.30,848க்கும், ஒரு கிராம் ரூ.3,856க்கும் விற்பனையாது. இன்று காலை நிவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.31,104 ஆக இருந்து. இந்த நிலையில், நேற்றைய விலையை விட சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.31,128க்கு விற்பனையாகி வருகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.35 உயர்ந்து ரூ.3,891க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலையும் 90 காசுகள் அதிகரித்து ரூ.50.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.50,100 ஆக உள்ளது. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு, தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. இந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »