Press "Enter" to skip to content

நடப்பு ஆண்டில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும்

புதுடில்லி: கடந்த ஆண்டில், இந்தியாவின் தங்கத்தின் தேவை, 9 சதவீதம் சரிந்து, 690.4 டன்னாக குறைந்துள்ளது என, உலக தங்கம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது குறித்து, உலக தங்கம் கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளதாவது:உலகளவில், அதிக தங்கத்தை வாங்கும் நாடுகளில், இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா. கடந்த ஆண்டில், இந்தியாவின் தங்கத்தின் தேவை, 9 சதவீதம் சரிந்து, 690.4 டன்னாக குறைந்துள்ளது.

பொருளாதார மந்தநிலை, உள்நாட்டு விலை, சில்லரை கொள்முதல் ஆகியவை, இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.இருப்பினும் நடப்பு, 2020ம் ஆண்டில், தங்கத்தின் தேவை, 700 – 800 டன்னாக அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. கொள்கை முடிவுஇதற்கு, அதிக விலை உயர்வை ஏற்றுக்கொள்ளும் போக்கு அதிகரிப்பது, பொருளாதார சீர்திருத்தங்களால் நுகர்வோர் நம்பிக்கை அதிகரிப்பது ஆகியவை காரணங்களாக அமையும்.கடந்த, 2019ம் ஆண்டின் முடிவில், தங்கத்தின் விலை, 10 கிராமுக்கு, 39 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. இது, 2018ம் ஆண்டின் இறுதியில் இருந்த விலையை விட, 24 சதவீதம் அதிகம்.கொள்கை மற்றும் தொழில் துறை சம்பந்தமான கொள்கை முடிவுகள், நடப்பு ஆண்டில், இந்த துறையை மிகவும் வெளிப்படைத் தன்மை அதிகம் கொண்ட துறையாக மாற்றும் என எதிர்பார்க்கலாம்.ஏற்கனவே, 15ம் தேதியிலிருந்து, தங்க நகைகளுக்கு, ‘ஹால்மார்க்’ கட்டாயம் என்ற நிலையை அரசு ஏற்படுத்தி உள்ளது.

இது காலதாமதமான நடவடிக்கை தான் எனினும், இந்த முயற்சி, இந்திய தங்கத்தை மேலும் நம்பிக்கைக்கு உரியதாக மாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும்.இது போன்ற நடவடிக்கைகள், தேவை அதிகரிப்பதற்கும், அவை நீண்ட காலத்துக்கு நீடிப்பதற்கும் உதவும்.இந்தியாவின் சராசரி நீண்ட கால தங்கம் தேவை, கிட்டத்தட்ட, 850 டன்.கடந்த, 2019ம் ஆண்டில், இந்தியாவின் தங்கத்தின் தேவை, 690.4 டன்னாக குறைந்துள்ளது.

இதுவே, 2018ம் ஆண்டில், 760.4 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இதில் நகைகளுக்கான தேவை, 2019ல், அதற்கு முந்தைய ஆண்டிலிருந்து, 9 சதவீதம் குறைந்து, அதாவது, 598 டன்னிலிருந்து, 544.6 டன்னாக குறைந்துள்ளது.மறு சுழற்சிமேலும், தங்கக் கட்டி மற்றும் நாணயங்களின் தேவையும் கடந்த ஆண்டில் சரிந்துள்ளது. இவற்றின் தேவை, 10 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டு, 162.4 டன்னிலிருந்து, 145.8 டன்னாக குறைந்துள்ளது.இருப்பினும், மதிப்பு அடிப்படையில் பார்க்கும்போது, 2019ல், 3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், தங்கத்தின் தேவையின் மதிப்பு, 2.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

இது, அதற்கு முந்தைய ஆண்டில், 2.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் தங்கம் இறக்குமதி மற்றும் கள்ள சந்தையையும் சேர்த்து கடந்த ஆண்டில், 14 சதவீதம் குறைந்துள்ளது. இறக்குமதி, 2018ல், 755.7 டன்னாக இருந்த நிலையில், 2019ல், 646.8 டன்னாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டில், கள்ள சந்தையின் மூலம் இறக்குமதி ஆன தங்கம் 115 – 120 டன். தங்கம் இறக்குமதி குறைந்ததற்கு முக்கிய காரணம், உள்ளூர் தேவை குறைந்தது மற்றும் தங்கத்தை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது, 37 சதவீதம் அதிகரித்தது ஆகியவையே. நடப்பு ஆண்டில், தங்கம் இறக்குமதி, நாட்டின் தேவைக்கு சமமாக விரைவாக உயராது என கருதுகிறோம். ஆனால், தங்கத்தின் மீதான சுங்க வரி, 12.5 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.பி.ஆர்.சோமசுந்தரம்நிர்வாக இயக்குனர், உலக தங்கம் கவுன்சில், இந்தியா

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »