Press "Enter" to skip to content

கரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இந்திய எலக்ட்ரானிக் சந்தை கடும் பதிப்பு..!

கரோனா வைரஸ் மக்களை மட்டும் வர்த்தகத்தையும் பெரிய அளவில் பாதித்துள்ளது, குறிப்பாகச் சீன பொருட்களை நம்பி இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களும், சீனா நிறுவனத்திற்குச் சேவை அளிக்கும் அல்லது வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் பாதித்துள்ளது. இப்படி அதிகப்படியாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

இந்தியாவில் தற்போது எலக்ட்ரானிக் பொருட்களின் தயாரிப்புப் பணிகள் பெரிய அளவில் பாதித்துள்ளது. இத்துறை கிட்டதட்ட 85 சதவீத பொருட்களைச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில் தற்போது இத்துறை வர்த்தகம் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது.

எலக்ட்ரானிக் பொருட்கள்

கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாகச் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அதிகளவில் குறைந்துள்ளது.

இதனால் இந்தியாவில் இருக்கும் ஸ்மார்ட்போன் மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தற்போது உற்பத்தியை குறைக்கவும், புதிய தயாரிப்புகளைச் சந்தையில் அறிமுகம் செய்வதைத் தள்ளிப்போடவும் முடிவு செய்துள்ளனர்.

சீனா ஆதிக்கம்

சீனா ஆதிக்கம்

இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது அசம்பிள் செய்யப்பட்டும் டிவிகளில் சுமார் 75 சதவீத பொருட்கள் சீனாவில் இருந்து தான் வருகிறது. இதேபோல் ஸ்மார்ட்போன் தயாரிப்பை எடுத்துக்கொண்டால் இதன் அளவு இன்னும் அதிகம் சுமார் 85 சதவீத.

மொபைல் டிஸ்பிளே, டிவி பேனலஸ், பிசிபி, கேப்பசிட்டர், மெமரி எனச் சகலும் சீனாவில் இருந்து தான் இந்தியா வருகிறது. இதோடு ஏசி உடைய கம்பிரசர் மற்றும் வாஷிங் மிஷின் மோட்டார் ஆகியவையும் இதில் அடக்கம்.

விலை உயர்வு

விலை உயர்வு

சீனாவில் இருந்து தற்போது ஏற்றுமதி அதிகளவில் குறைந்துள்ள நிலையிலும், வெளிநாட்டுச் சந்தையில் சீனா எலக்ட்ரானிக் பொருட்களின் தேவை அதிகமாக இருப்பதால் பல சீன வியாபாரிகள் தற்போது பொருட்களின் விலை 2 முதல் 3 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டு உள்ளது.

இப்படி விநியோகமும், விலையும் சாதகமான சூழ்நிலையில் இல்லாத காரணத்தால் இந்த உற்பத்தி மந்த நிலை எப்போது சரியாகும் எனத் தெரியவில்லை.

130 பேர் பலி

130 பேர் பலி

இதுவரை உலகளவில் கரோன வைரஸ் மூலம் உலக நாடுகளில் சுமார் 130 பேர் இறந்துள்ளனர். மேலும் 6000 பேர் இந்தக் கொடிய வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »