Press "Enter" to skip to content

நெகிழி (பிளாஸ்டிக்) சாலை.. முகேஷ் அம்பானியின் டக்கரான ஐடியா..!!

இந்தியாவில் கிட்டதட்ட அனைத்து துறைகளிலும் வர்த்தகம் செய்யும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது ரோடு போடும் வேலையிலும் இறங்க உள்ளது, ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம். முகேஷ் அம்பானி திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் இந்தியா முழுவதும் இனி முகேஷ் அம்பானி தான் ரோடு போடப்போகிறார்.

ஆம், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் வேஸ்ட் பிளாஸ்ட் பொருட்களைப் பயன்படுத்திச் சாலை அமைக்கும் வர்த்தகத்தைத் துவங்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸ்: மருந்து நிறுவனப் பங்குகள் 30நாளில் 5 மடங்கு தடாலடி உயர்வு..!

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிட்டுமென் மிக்ஸ் உடன் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாகச் சாலை போடப்பட்டது. இதில் ஆச்சரியம் அடைந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி சாலை கட்டுமானத்தில் இருக்கும் நிறுவனங்களுக்குப் பிளாஸ்டிக் களவையை விற்பனை செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறார்.

தேசிய நெடுஞ்சாலை துறை

தேசிய நெடுஞ்சாலை துறை

இந்நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தேசிய நெடுஞ்சாலை அமைப்பிடம் இனி வரும் ரோடு கான்டிராக்ட் திட்டத்தில் பிளாஸ்ட் மிக்ஸ் பொருட்களை இணைக்கும் படியம், நாடு முழுவதும் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்திச் சாலை அமைக்கும் திட்டத்தை ஊக்குவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தில் தலைமை செயல் அதிகாரி விபுல் ஷா தெரிவித்துள்ளார்.

விபுல் ஷா

விபுல் ஷா

இதைப்பற்றி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தில் தலைமை செயல் அதிகாரி விபுல் ஷா கூறுகையில், எங்களது பிளாஸ்டிக் சாலை திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இது முழுமையான திட்டமாக இருக்கும் என நம்புகிறோம். இதுமட்டும் அல்லாமல் சாலை போடுவதற்கு ஏற்ற தரம் மற்றும் சைஸ் வாரியான பிளாஸ்டிக்-ஐ ரிலையன்ஸ் தயாரித்துச் சந்தை படுத்தவும் திட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதுமட்டும் அல்லாமல் இதற்காகத் தனிப் பிராண்டை உருவாக்கவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெட்ரோகெமிக்கல் வர்த்தகப் பிரிவு திட்டமிட்டு உள்ளது.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 25,940 டன் பிளாஸ்டிக் வேஸ்ட் உருவாக்கப்படுகிறது. இதைச் சரியான முறையில் சேகரித்துப் பிராசஸ் செய்தாலே போதும், ஆனால் இந்தியாவில் இதை எப்படிச் சேகரிப்பது என்பது தான் பிரச்சனை.

ரிலையன்ஸ் ஏற்கனவே இந்தியாவில் சுமார் 200 கோடி பிளாஸ்டிக் பெட் பாடிட்டில்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதை அடுத்த 15-18 மாதத்தில் இரட்டிப்பு ஆக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் பிளாஸ்டிக் பைபர்களைப் பயன்படுத்தி R|Elan என்ற பிராண்ட்-இன் கீவ் குடைகளைச் செய்து வர்த்தகம் செய்து வருகிறது.

வர்த்தக வாய்ப்பு

வர்த்தக வாய்ப்பு

பிட்டுமென் மிக்ஸ் உடன் சேர்க்கப்படும் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் சாலையின் வலிமை அதிகரிக்கும் அதுமட்டும் அல்லாமல் தண்ணீரால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இதுமட்டும் இல்லாமல் 3.5 மீட்டர் அகலம் கொண்ட ஒரு கிலோமீட்டர் சாலைக்குச் சுமார் 1 லட்சம் ரூபாய் வரையில் தற்போதைய செலவில் மிச்சப்படுத்த முடியும்.

இது இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தை உருவாக்கும். இதை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று தான் ரிலையன்ஸ் துடிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »