Press "Enter" to skip to content

Indian Economic survey என்றால் என்ன..? யார் தயாரிக்கிறார்கள்..!

ஒரு விஷயத்தை செய்வதற்கு முன், அந்த விஷயத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை வேண்டும் இல்லையா..? அது போலத் தான் இந்த Indian Economic Survey என்று அழைக்கப்படும் இந்தியப் பொருளாதார சர்வேயும். பொதுவாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் தான் பொருளாதார சர்வேயை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்வார்கள். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த, இந்தியப் பொருளாதார சர்வே-யை, இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்த இந்தியப் பொருளாதார சர்வே, மத்திய நிதி அமைச்சகத்தின் மிக முக்கிய டாக்குமெண்ட்களில் ஒன்று. இந்த இந்தியப் பொருளாதார சர்வேயில், இந்தியப் பொருளாதாரத்தின் நிலை, பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் சொல்லி இருப்பார்கள்.

பொதுவாக இந்தியப் பொருளாதார சர்வேயில் மூன்று பிரிவுகள் இருக்கும். வால்யூம் 1, வால்யூம் 2 மற்றும் தரவுகள். இந்த பிரிவுகளில், மேக்ரோ பார்வையில் இந்தியப் பொருளாதாரம், வரி மற்றும் செலவீனங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பரிந்துரைகள், பணக் கொள்கை நிர்வாகம், விலை வாசி என பல முக்கிய விவரங்களைப் பற்றிச் அலசி ஆராய்ந்து சொல்லி இருப்பார்கள்.

இந்த இந்தியப் பொருளாதார சர்வே டாக்குமெண்டை, இந்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் வழிகாட்டுதலின் படி தயார் செய்வார்களாம். இந்தியாவில் கடந்த 1950 – 51-ம் ஆண்டில் இருந்து இந்தியப் பொருளாதார சர்வே-யை தயார் செய்து வருகிறார்களாம். 1964-ம் ஆண்டு வரை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது தான் இந்தியப் பொருளாதார சர்வே-யையும் தாக்கல் செய்வார்களாம். அதற்குப் பிறகு தான், இந்தியப் பொருளாதார சர்வே-யை முந்தைய நாளே தாக்கல் செய்யும் பழக்கம் வந்தது.

imageபட்ஜெட் 2020: இந்தியாவின் முந்தைய தலையெழுத்து இது தான்.. இனியாவது மாறுமா..!

அர்விந்த் சுப்ரமணியம், இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்த போது, 2018-ம் ஆண்டில் இந்த சர்வேயில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். அர்விந்த் சுப்ரமணியன் தயாரித்த இந்திய பொருளாதார சர்வே-க்களை பிங்க் நிற பெப்பரில் பிரிண்ட் செய்தார். அதோடு இந்த டாக்குமெண்ட் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என, சுவையான பழமொழிகள், சில சுவாரஸ்ய தகவல்கள், ஜிஎஸ்டி மற்றும் இந்திய ரயில்வேஸின் தரவுகள் என பலவற்றையும் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, அடுத்த 2020 – 21 நிதி ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார சர்வே விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி, சர்வே என்ன சொல்கிறது என பார்த்துவிடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »