Press "Enter" to skip to content

பொருளாதார மேலாய்வு 2020: வேலை வாய்ப்பை உருவாக்குவதில் சீனாவின் மாதிரியை பின்பற்றுங்கள்.. !

டெல்லி: நாட்டில் வேலையின்மை விகிதம் ருத்ர தாண்டவம் ஆடி வரும் நிலையில், மிக கவலை கொள்ளும் விஷயங்களில் ஒன்றாக வேலையின்மை உள்ளது.

சொல்லப்போனால் கடந்த டிசம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.13% ஆக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த நவம்பர் மாதத்தில் 6.82% ஆக இருந்துள்ளது. அந்தளவுக்கு நாட்டில் நாளுக்கு நாள் வேலையின்மை விகிதம் அதிகரித்து கொண்டே வருகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார சர்வே 2020ல் மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தனது இரண்டாவது பொருளாதார ஆய்வறிக்கையினை தாக்கல் செய்தார்.

imageஇந்திய பொருளாதார மந்த நிலைக்கு உலக விவகாரங்களும் காரணம்..!

இதில் இந்தியாவில் வேலை வாய்ப்பை அதிகரிக்க கண்டிப்பாக சீனாவின் வளர்ச்சி மாதிரியை பின்பற்றுங்கள் என்று மத்திய அரசுக்கு தனது கருத்தினை எடுத்துரைத்துள்ளார். மேலும் நாட்டில் வேலையின்மை உயர்ந்து வருவது இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய கவலைகளில் ஒன்றாகும். ஆக இணையற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்க சீனா போன்ற வளர்ச்சி மாதிரிகளை பின்பற்ற வேண்டும் என்றும் பொருளாதார சர்வேயில் தெரிவித்துள்ளார்.

மேலும் சீனா போன்ற உழைப்பு மிகுந்த ஏற்றுமதி பாதையை தேர்ந்தெடுங்கள், இது இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், மேலும் இது இந்திய பொருளாதாரம் மேம்படுவதற்கும் கைகொடுக்கும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நெட்வொர்க் தயாரிப்புகளில் சீனா போன்ற மாதிரியை பின்பற்றுவதன் மூலம், ஒரு புறம் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். இதன் மூலம் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியையும் அதிகரிக்க முடியும். ஆக இதை இந்தியா பயன்படுத்தினால் பொருளாதாரமும் மேம்பட இது வழிவகுக்கும்.

இதற்கிடையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் 2025ம் ஆண்டில் 4 கோடி வேலை வாய்ப்புகளும், இதே 2030ல் 8 கோடி வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்றும் இந்த அறிக்கைகள் எடுத்துரைக்கின்றன.

பொருளாதாரத்தில் மொத்த முறையான வேலை வாய்ப்பினை 2011 – 2012ல் 8% முறையான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், இதே 2017 – 18ல் 9.98% ஆக அதிகரித்துள்ளதாகவும் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார ஆய்வின் படி, குறிப்பாக கிராமப்புறங்களில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு குறைந்து வருவதால், இந்தியாவில் தொழிலாளர் சந்தையின் பாலின ஏற்றத்தாழ்வு விரிவடைந்துள்ளது என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »