Press "Enter" to skip to content

ஐ.பி.எம்., உயர் பொறுப்பில் இந்தியர்

நியூயார்க் : கூகுளின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்டின் சத்ய நாதெள்ளா வரிசையில், தற்போது, ஐ.பி.எம்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, இந்தியாவைச் சேர்ந்த அர்விந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

‘அடுத்த யுகத்துக்கான, ஐ.பி.எம்., நிறுவனத்தின், சரியான தலைமை செயல் அதிகாரி’ என, ஐ.பி.எம்., நிறுவனம், அர்விந்த் கிருஷ்ணாவை குறிப்பிட்டு பாராட்டி உள்ளது.ஏப்ரல், 6ம் தேதி முதல், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக குழுவில் உறுப்பினராகவும் பதவி ஏற்க உள்ளார், அர்விந்த் கிருஷ்ணா.கான்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்த, 57 வயதாகும் அர்விந்த் கிருஷ்ணா, 1990ல், ஐ.பி.எம்., நிறுவனத்தில் சேர்ந்தார்.‘‘ஐ.பி.எம்.,மின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை மகிழ்ச்சியுடனும், தாழ்மையுடனும் ஏற்கிறேன்.

நிர்வாக குழு என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாராட்டுகிறேன்,” என, அர்விந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.தொழில்நுட்ப துறைகளில், இந்திய வம்சாவளிகளுக்கு உயர் பதவிகள் கிடைப்பது தொடர்ந்து வருகிறது.கூகுள் மற்றும்ஆல்பபெட் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்டில் சத்ய நாதெள்ளா, அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயன், மாஸ்டர்கார்டில் அஜய் பங்கா ஆகியோரை தொடர்ந்து, ஐ.பி.எம்.,மில் அர்விந்த் கிருஷ்ணா தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »