Press "Enter" to skip to content

5 பெரிய வருமான வரி மாற்றங்கள்.. வரவு செலவுத் திட்டம் 2020 எதிர்பார்ப்புகள்..!

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். சாமானிய மக்கள் முதல் முதலாளிகள் வரையில் அனைத்துத் தரப்பு மக்களும் பட்ஜெட் அறிக்கையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் பல வருமான வரி மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் 2020: ரயில்வே துறைக்குக் கிடைக்கப்போவது என்ன..?

மாற்றம் 1

மாற்றம் 1

தற்போது 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 0% TAX REBATE வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் 5-10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.

இதை இந்தப் பட்ஜெட் அறிக்கையில் 10 சதவீதமாகக் குறைக்க அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது. இதன் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 10 சதவீத வரிப் பட்டியில் நடைமுறைக்கு வர உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

மாற்றம் 2

மாற்றம் 2

2018இல் மோடி தலைமையிலான மத்திய அரசு பங்குகள் மீது long-term capital gains tax-ஐ கொண்டு வந்தது. பட்டியலிடப்பட்டுப் பங்குகளை மாற்றும்போது 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாங்குகளுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

இன்று பலரும் மியூச்சுவல் பண்ட், பங்கு முதலீடுகள் மூலம் பங்குகளை வைத்திருக்கும் நிலையில் புதிய முதலீட்டாளர்களுக்கும், தற்போது இருக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஏதுவான தளத்தை அமைத்துத் தர 1 லட்சம் ரூபாய் அளவீட்டை 2 லட்சமாக உயர்த்தவும், 2 வருட கால அவகாசத்தை மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றம் 3

மாற்றம் 3

முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு மத்திய அரசு மலிவான வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 45 லட்சத்திற்குக் குறைவான வீடுகளை வாங்கும் போது 1.5 லட்சம் ரூபாய் வட்டியில் தள்ளுபடி கொடுக்கப்பட்டது.

இதனால் ஆனால் இன்றைய கடுமையான விலைவாசியின் காரணமாக 2ஆம் தர நகரங்களில் இத்திட்டத்தால் எவ்விதமான பயனும் இல்லாமல் உள்ளது. எனவே மக்கள் இத்திடத்தின் மூலம் பயன்பெற 45 லட்சம் ரூபாய் அளவீட்டை இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அதிகரிக்கப்போவதாக எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

மாற்றம் 4

மாற்றம் 4

வருமான வரிச் சட்டம் 80சி-யின் கீழ் தற்போது ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் அளவிலான வருமான வரிச் சலுகை பெறுகிறோம். இந்த அளவு 2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றம் 5

மாற்றம் 5

NPS திட்டம் மக்கள் மத்தியில் முழுமையாகச் சென்று அடையவில்லை, அதை மக்களிடம் வேகமாகவும், எளிதாகவும் கொண்டு செல்ல மத்திய அரசு இத்திட்டத்தின் மீதான வரிச் சலுகையை அதிகரிக்க வேண்டும் எனப் பல முறை பல தரப்பினர் மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் பட்ஜெட் அறிக்கையில் NPS திட்டத்திற்கு இருக்கும் 50000 ரூபாய் வரிச் சலுகையை 1 லட்சம் ரூபாயாக உயர்த்த உள்ளதாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »