Press "Enter" to skip to content

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி இல்லை: வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்பு

5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 லட்சத்திற்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ளவர்களின் வருமான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி

ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால், வருமான வரி 20-ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

image

ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் இருந்தால், வருமான வரி 20%ல் இருந்து 15%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 30%ல் இருந்து 20%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

image

ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி விகிதம் 30%ல் இருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30% வருமான வரி என்பதில் மாற்றம் இல்லை

Source: puthiyathalaimurai

More from வணிகம்More posts in வணிகம் »