Press "Enter" to skip to content

முதலீட்டாளர்களைக் கவராத வரவு செலவுத் திட்டம்.. சர்ரென வீழ்ந்தது பங்குச் சந்தை.. ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி!

மும்பை: நாட்டில் நிலவி வரும் மோசமான மந்த நிலைக்கு மத்தியில், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில் மிக மோசமான நிலையில் இருக்கும் பொருளாதார நிலையை மேம்படுத்த முக்கிய நடவடிக்கைகள் இருக்கலாம் என்று மிக ஆவலாக மக்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலையில் வீழ்ச்சியில் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் தற்போதும் வீழ்ச்சி கண்டுள்ளன.

தற்போது (2.50 மணியளவில்) மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 651 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 40,072 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 199 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,765 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 71.34 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.

தனது பட்ஜெட் உரையில் அரசு வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான சுங்க வரிகளை அரசு உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து நிஃப்டி ஆட்டோமொபைல் துறை குறியீடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

சிகரெட் பொருட்கள் மீதான கலால் வரியை உயர்த்த அரசாங்கம் முமொழிந்ததையடுத்து ஐடிசி பங்கு விலையானது வீழ்ச்சி கண்டுள்ளது. அதிலும் ஐடிசி நிறுவன பங்கின் விலையானது 52 வார குறைந்த அளவை எட்டியது.

இதே நிஃப்டி குறியீட்டில் உள்ள டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்கு விலைகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன். ஐடிசி, ஜி எண்டர்டெயின்மென்ட, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்கு விலைகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

இதே சென்செக்ஸ் குறீயீட்டில் டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்கு விலைகள் டாப் கெயினர்களாகவும், இதே லார்சன், ஹெச்.டி.எஃப்.சி, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்கு விலைகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

மேலும் இது தவிர கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறீயீடுகள் அனைத்தும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »