Press "Enter" to skip to content

வருகிறது புதிய வருமான வரி திட்டம்.. அதிக சம்பளம் வாங்குவோருக்கு பயன் இல்லையே..!

டெல்லி: பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் பட்ஜெட் 2020 சனிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதிய வருமான வரியை கணக்கிடுவதில் இதுவரை இல்லாத வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் கணிசமான அளவு வருமான வரி குறைக்கப்பட்டபோதிலும், 80 சி உட்பட சில வரி சலுகைகள் அளிக்கப்படவில்லை.

இந்த பட்ஜெட்டில் வரிமான வரி சற்று குறைக்கப்பட்டுள்ளது. அதோடு வருமான வரி கணக்கிடும் முறைகளிலும் சற்று மாறுதல் செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த வருமான வரி அதிக சம்பளம் வாங்குவோருக்கு பயன் அளிக்கும் விதமாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

புதிய திட்டத்தின் கீழ் வரி

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை. எனினும் 5 லட்சம் ரூபாய் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி 10% ஆக வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதே 7.5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 15% வரி வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி சற்று குறைப்பு

வரி சற்று குறைப்பு

இதே 10 லட்சம் ரூபாய் முதல் 12.5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு 20% வரி வசூலிக்கப்படும் என்றும், இதுவே 12.5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 25% வரி வசூலிக்கப்படும் என்றும் சனிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாற்றம் இல்லையே

இதில் மாற்றம் இல்லையே

இவ்வாறு குறைவாக சம்பளம் வாங்குவோருக்கு வரி குறைக்கப்பட்டிருந்தாலும், 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு 30% வரி எப்போதும் போல தொடரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சலுகை இனி கிடையாது

இந்த சலுகை இனி கிடையாது

இந்த புதிய வருமான வரி திட்டத்தின் படி, 5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் பெறுவோருக்கு வருமான வரி கிடையாது என்றாலும், 80 சிசி உட்பட எந்த ஒரு வரிவிலக்கும் இதற்கு அளிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது. 80சி மற்றும் 80 டி பிரிவுகளின் கீழ் தற்போது வீட்டு வாடகை, பொழுதுபோக்கு அலவன்ஸ், புரபஷனல் வரி, குடியிருக்கும் வீடு மற்றும் காலி இடங்களுக்கான வீட்டுக் கடன் வட்டி போன்றவற்றைச் செலுத்தும் தொகைகளுக்கு இனிமேல் வருமான வரிச் சலுகை பெற முடியாது என்றும் செக் வைத்துள்ளது மத்திய அரசு.

இந்த சலுகையெல்லாம் இனி கிடையாது

இந்த சலுகையெல்லாம் இனி கிடையாது

மேலும் அடுத்த நிதியாண்டில் இருந்து அதிக வருமானம் ஈட்டுபவர்கள் வருங்கால வைப்பு நிதி, தேசிய ஓய்வூதிய திட்டம், மேலதிக நிதி (superannuation fund) உள்ளிட்டவற்றில் பங்களிப்பு செய்தவர்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். புதிய வருமான வரி ஒருவர் பெறுகிறார் எனில், முன்னர் பெற்றுவந்த வரிக்கழிவு சலுகையை பெற முடியாது. ஆக இந்த திட்டம் அவ்வளவாக பெரிதும் பயன் தருவதாக இல்லை.

பழைய திட்டம் இது தான்

பழைய திட்டம் இது தான்

இதே பழைய வருமான வரி திட்டத்தில் 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் 5% வரியும், இதே 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் 20% வரியும் வசூலிக்கப்பட்டு வந்தது. இதே 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30% வரி வசூலிக்கப்பட்டும் வந்தது. இந்த நிலையில் வருமான வரி செலுத்தும் ஒருவர் பழைய அல்லது புதிய திட்டம் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »