Press "Enter" to skip to content

ஏமாற்றம் கண்ட ஆட்டோமொபைல் துறையினர்.. வரவு செலவுத் திட்டத்தில் எங்களுக்கு எதுவும் இல்லையே..!

டெல்லி: பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்களிலேயே அதிக நேரம் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் என்ற சாதனை ஒரு புறம்.

மிக மோசமான பின்னடைவை சந்தித்திருக்கும் ஆட்டோமொபைல் துறையினர் மறுபுறம். அதிலும் பட்ஜெட்டில் தங்கள் துறையை மேம்படுத்த ஏதேனும் எழுச்சி நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்த அறிவிப்பும் இல்லை என சுட்டிக் காட்டியுள்ளது பட்ஜெட் 2020.

இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ஏமாற்றம் கண்ட ஆட்டோமொபைல் துறையினர் என்ன சொல்கிறார்கள் வாருங்கள் பார்க்கலாம்.

ஸ்கிராப் திட்டம்

கடந்த பல மாதங்களாக வீழ்ச்சி கண்டு வரும் ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில், பலத்த எதிர்பார்ப்புகள் நிலவியது என்றே கூறலாம். குறிப்பாக சொல்லப்போனால் பழைய வாகனங்களை 15 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதனை ஸ்கிராப் செய்வதன் மூலம், அந்த வாகனங்கள் உபயோகம் அதோடு நிறுத்தப்படும் என்றும் கருதப்படுகிறது. இவ்வாறு ஸ்கிராப்புக்கு கொண்டு செல்வதன் மூலம், இந்த பழைய வாகனங்கள் உருக்கப்பட்டு புது வாகனங்களாக உருப்பெறும் என்றும் கூறப்பட்டது.

அமல்படுத்தினால் வாகன விற்பனை அதிகரிக்கும்

அமல்படுத்தினால் வாகன விற்பனை அதிகரிக்கும்

மேலும் இதனால் சுற்றுசூழல் மாசுபாடு குறையும். இதனால் பழைய வாகனங்கள் தொடர்ந்து சாலைகளில் பயணிப்பது குறையும். சுற்று சூழல் பாதிப்பும் குறையும் மேலும் வாடிக்கையாளர்கள் பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களைக் வாங்கும்போது, வாகன விற்பனையும் அதிகரிக்கும்.. இதோடு அந்த பழைய வாகனங்கள் உபயோகம் அதோடு நிறுத்தப்படும் என்றும் கருதப்பட்டது. ஆக இது குறித்தான அறிக்கை ஏதேனும் வெளியிடப்படலாம் என்றும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை. இது பெரும் ஏமாற்றத்தையே அளிக்கிறது என்றும் இத்துறையினர் கூறுகின்றனர்.

ஜிஎஸ்டி வரியில் மாற்றம் இல்லையே

ஜிஎஸ்டி வரியில் மாற்றம் இல்லையே

ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையின் ஒரே எதிர்பார்ப்பு, தற்போது இருக்கும் 28% ஜிஎஸ்டி விகிதத்தினை 18%மாக குறைக்க வேண்டும் என்பதே. குறிப்பாக கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான வரியை குறைப்பதற்கான அற்விப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் இல்லை. இது ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையினருக்கும் ஏமாற்றம் அளிப்பதாகவே இருக்கிறது.

பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது

பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது

மிக மோசமான பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மறுமலர்ச்சியை தூண்டுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எதிர்பார்த்த நிலையில் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதது மிக ஏமாற்றமளிக்கிறது. மேலும் பட்ஜெட்டில் நாங்கள் சில நேரடி நன்மைகளைத் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இது தற்போது மந்த நிலையில் இருக்கும் தொழில் துறையினரை பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப மாற்றவும், முதலீடுகளை புதுபிக்க உதவும் என்றும் நினைத்தோம். ஆனால் அப்படி ஏதும் இல்லை.

இறக்குமதி வரி எதிர்பார்ப்பு

இறக்குமதி வரி எதிர்பார்ப்பு

நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் எலட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையிலான லித்தியம் பேட்டரி மீதான பூஜ்ஜிய இறக்குமதி வரியாக குறைக்க வேண்டும் என்று உள்ளிட்ட பல கோரிக்கைகளை வாகனத்துறை மத்திய அரசிடம் வைத்துள்ளதாகவும், ஆனால் அப்படி ஏதும் பட்ஜெட்டில் குறைக்கப்படவில்லை என்றும் சியாமின் (society of Indian Automobile Manufacturers) தலைவர் ராஜன் வதேரா கூறியுள்ளார்.

வாகன வீழ்ச்சி

வாகன வீழ்ச்சி

அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ள வாகனத்துறை, நுகர்வோர் வீழ்ச்சி, செலவினங்கள் அதிகரிப்பு என பல பிரச்சனைகளின் கீழ் இத்துறை நீடித்த மந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2019ல் பயணிகள் வாகன விற்பனை 13% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே இருசக்கர வாகன விற்பனையானது 14.2% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே லாரிகள் மற்றும் பேருந்துகள் விற்பனை மேலும் 15% வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த நிதியாண்டில் இது மிக தட்டையானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் இந்த பட்ஜெட் 2020 சற்று ஏமாற்றமாகத் தான் உள்ளது என்று கூறுகின்றனர் ஆட்டோமொபைல் துறையினர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »