Press "Enter" to skip to content

வரவு செலவுத் திட்டம் 2020: A – Z..வரவு செலவுத் திட்டம் ஹைலைட்கள் பாகம் – 3, கல்வி மற்றும் திறன்!

நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் 2020 – 21-ன் ஹைலைட்களின் இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் நீர் குறித்துப் பேசிய பின் கல்வி மற்றும் திறன் குறித்துப் பேசி இருக்கிறார்.

இதோ கல்வியில் இருந்து தொடங்குவோம். 2030-ல் இந்தியா தான், அதிக அளவில் வேலை பார்க்கக் கூடிய வயதில் இருக்கும் மக்களை கொண்ட நாடாக இருக்கும் என நிதி அமைச்சரே சொல்லி இருக்கிறார்.

புதிய கல்விக் கொள்கை

இந்தியாவில் இருக்கும் இளைஞர்களுக்கு வெறுமனே படிப்பறிவு இருந்தால் போதாது, நல்ல வேலையும், வாழ்கை திறன்களும் வேண்டும். புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வர மாநில கல்வி அமைச்சகம் தொடன்ங்கி எம்பிக்கள் வரை பலரிடமும் கேட்டு 2 லட்சம் கருத்துக்களைப் பெற்று இருக்கிறார்களாம். ஆக விரைவில் புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்.

முதலீடுகள்

முதலீடுகள்

கல்வியின் தரம் உயர, திறமையான் ஆசிரியர்களை ஈர்க்க நிறைய பணம் தேவைப்படுகிறது. புதிய பரிசோதனைச் சாலைகளைக் கட்ட வேண்டி இருக்கிறது. எனவே External Commercial Borrowings என்று சொல்லப்படுகின்ற வெளிநாட்டில் இருந்து கடன் வாங்குவது மற்றும் அந்நிய நேரடி முதலீடுகள் வழியாக பணத்தைத் திரட்ட நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறார்களாம்.

வேலை

வேலை

மாணவர்கள் வேலைக்கு தேர்ந்து எடுக்கப்படுவது அதிகரிக்க, இந்தியாவில் 150 கல்வி நிலையங்களில், apprenticeship உடன் கூடிய பட்டப் அப்டிப்பு அல்லது டிப்ளமோ படிப்புகளை வரும் மார்ச் 2021-க்குள் கொண்டு வர இருக்கிறார்களாம். அதோடு நகர் புறத்தில் இருக்கும் லோக்கல் அரசு அமைப்புகள், படித்த பொறியியல் இளைஞர்களுக்கு, ஒரு வருட இண்டர்ன்ஷிப் வாய்ப்பு கொடுக்கவும் திட்டங்களைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார்கள்.

ஆன்லைன் பட்டப் படிப்பு

ஆன்லைன் பட்டப் படிப்பு

National Institutional Ranking framework-ல் முதல் 100 இடங்களைப் பிடித்து இருக்கும் கல்லூரிகள், இனி ஆன்லைனிலேயே தங்கள் பட்டப் படிப்புகளை வழங்கச் சொல்லி இருக்கிறார்கள். தொடக்கத்தில் சில கல்லூரிகள் மட்டும் இந்த ஆன்லைன் டிகிரி படிப்பை வழங்குவார்களாம். இனி ஆன்லைன் கோர்ஸ் போல கல்லூரிப் படிப்பையும் ஆன்லைனிலேயே பெறலாம்.

மருத்துவக் கல்லூரி

மருத்துவக் கல்லூரி

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லை. எனவே இதுவரை மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் PPP – Public Private Partnership முறையில் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு மாநில அரசு சலுகையில் நிலங்களைக் கொடுக்க வேண்டி இருக்குமாம். அதற்கு மத்திய அரசு Viability Gap Funding கொடுக்க இருக்கிறார்களாம்.

தரம் உயர்வு

தரம் உயர்வு

வெளிநாடுகளில் ஆசிரியர்கள், செவிலியர்கள், பாரா மெடிக்கல் உதவியாளர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்பவர்கள் போன்றவர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து இந்த வேலைகளுக்குச் செல்பவர்களின் தரம், வேலை கொடுப்பவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை. இந்த பிரச்னையை சரி செய்ய அரசு ஒரு புதிய கோர்ஸைக் கொண்டு வர இருக்கிறதாம்.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

எனவே சுகாதார அமைச்சகமும், ஸ்கில் டெவலெப்மெண்ட் அமைச்சகமும் இணைந்து ஒரு சிறப்பு கோர்ஸைக் கொண்டு வர இருக்கிறார்களாம். ஆக கல்வித் துறைக்கு மட்டும் 2020 – 21 நிதி ஆண்டில் 99,300 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது மத்திய அரசு. ஸ்கில் டெவலெப்மெண்ட் மட்டும் 3,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »