Press "Enter" to skip to content

வரவு செலவுத் திட்டம் 2020: தொழில் துறை, வணிகம் மற்றும் முதலீடுகள் வரவு செலவுத் திட்டம் ஹைலைட்கள் பாகம் – 4

நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் 2020 – 21-ன் ஹைலைட்களின் மூன்றாம் பாகத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

பட்ஜெட்டின் மூன்றாவது பாகமாக கல்வி மற்றும் திறன் மேம்பாடு பற்றிப் பேசிய பிறகு தொழில் துறை, வணிகம் மற்றும் முதலீடுகள் பற்றிப் பேசினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன்.

இந்த பிரிவைப் பேசத் தொடங்கும் போதே “இந்திய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லை. அவர்களை வேலை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்” என தன் பேச்சில் சொன்னார் நிர்மலா சீதாராமன்.

முதலீடு அனுமதி செல்

அந்த இளைஞர்கள் நிம்மதியாக தங்கள் தொழில்களைத் தொடங்க, ஒரு முதலீட்டு அனுமதி செல் (Investment Clearance Cell) தொடங்கச் சொல்லி இருக்கிறார்கள். இந்த செல் தொழில் தொடன்ங்க இருப்பவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகலையும், ஆலோசனைகலையும் கொடுப்பார்களாம். அது போல மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்ந்த அனுமதிகளையும் எளிமையாக்கிக் கொடுப்பார்களாம். இந்த செல் ஆன்லைன் இயங்கப் போகிறதாம்.

5 ஸ்மார்ட் சிட்டிகள்

5 ஸ்மார்ட் சிட்டிகள்

பொருளாதார காரிடார்கள், உற்பத்தித் துறையை வலுப்படுத்துவது, டெக்னாலஜி மற்றும் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு வர விரும்பும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது போன்றவைகளுக்காக, 5 ஸ்மார்ட் சிட்டிக்களைக் கட்டமைக்க இருக்கிறார்களாம். இந்த 5 ஸ்மார்ட் சிட்டிக்கள் மாநிலங்கள் உதவியுடன் PPP – Public Private Partnership-ல் கட்டமைக்க இருக்கிறார்களாம்.

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

இந்தியாவில் எலெக்ட்ரானிக் பொருட்களான ஸ்மார்ட்ஃபோன்கள், செல்போன்கள் போன்றவைகளை தயாரிப்பதால், இந்தியர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அதோடு உலக பொருளாதாரத்தின் வேல்யூ செய்னிலும் இந்தியா இருக்கும். எனவே இந்தியாவில் எலெக்ட்ரானிக் பொருட்களை மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்களைத் தயாரிக்க தனி திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறார்களாம். இதே திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மருத்துவ சாதனங்கலையும் தயாரிக்களாமாம்.

டெக்னிக்கல் டெக்ஸ்டைல்

டெக்னிக்கல் டெக்ஸ்டைல்

சுரங்கத்தில் வேலை செய்பவர்கள், ரசாயன ஆலைகளில் வேலை செய்பவர்களுக்கு எல்லாம் விபத்து நேராமல் இருக்க உடுத்திக் கொள்ளும் ஆடைகளைத் தான் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் என்று சொல்வார்கள். இந்த டெக்னிக்கல் டெக்ஸைடைல்களை இந்தியா ஆண்டுக்கு 16 பில்லியன் டாலர் இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறது. இதை மாற்ற, 1,480 கோடி ரூபாய் முதலீட்டில் National Technical Textiles Mission தொடங்க இருக்கிறார்களாம்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

சிறு குறு ஏற்றுமதியாளர்களுக்கு பயன் கொடுக்கும் விதத்தில் NIRVIK என்கிற திட்டத்தின் கீழ் குறைந்த பிரீமியம் தொகையில் அதிக இன்சூரன்ஸ் கவரேஜ் கொடுக்க இருக்கிறார்களாம். அதோடு ஏற்றுமதி இன்சூரன்ஸ் க்ளைம் பெறும் நடைமுறையையும் எளிமையாக்க இருக்கிறார்களாம். ஏற்றுமதி வளர்ந்தால் நாட்டின் பொருளாதாரமும் கொஞ்சம் வளரத் தானே செய்யும்.

ஏற்றுமதி ரீஃபண்ட்

ஏற்றுமதி ரீஃபண்ட்

இதுவரை இந்தியாவில் ஏற்றுமதி செய்து கொண்டு இருப்பவர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு செலுத்திக் கொண்டு இருக்கும் Duties and Taxes (மின்சார வரிகள் மற்றும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி போன்றவைகள்) ரீஃபண்ட் வழங்கப்படுவதில்லை. இந்த வரிகளை டிஜிட்டலாக ரீஃபண்ட் கொடுக்க இந்த 200 – 21 நிதி ஆண்டில் ஒரு திட்டம் கொண்டு வரப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

தொழில்முனைவோர்கள்

தொழில்முனைவோர்கள்

Government e-Marketplace (GeM)திட்டத்தை முன்பே அறிவோம். இப்போது அந்த திட்டத்தின் வழியாக, இந்தியாவில் சிறு குறு தொழில் செய்பவர்கள் பயன்பெறும் விதத்தில், ஒருங்கிணைந்த பர்சேஸ் முறை (Unified Procurement System) கொண்டு வர இருக்கிறார்களாம். இது இந்தியாவில் பொருள் விற்பவர்கள், சேவை வழங்குபவர்கள் மற்றும் வேலை செய்து கொடுப்பவர்கள் என எல்லோருக்கும் பொருந்துமாம். ஆக தொழில் துறை மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக 27,300 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »