Press "Enter" to skip to content

கொரோனாவின் கொடூர பின்னணி.. வீழ்ச்சி காணும் கச்சா எண்ணெய் விலை.. கதறும் உற்பத்தியாளர்கள்..!

சிங்கப்பூர்: சீனாவில் கொரோனாவின் கொடூரத்தால் இதுவரை சுமார் 361 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில், இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது சீனாவின் மீது மிகப்பெரிய பொருளாதார ரீதியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஏனெனில் அனுதினமும் இந்த கொடிய நோயால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருவதோடு, நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தேவை வீழ்ச்சி

உலகின் மிகப்பெரிய அளவு மக்கள் தொகையை கொண்டுள்ள ஒரு நாட்டில், இப்படி தொற்று நோய் ஏற்பட்டிருப்பது, சுகாதார ரீதியில் மட்டும் அல்லாது பொருளாதார ரீதியிலும் அதனை பின்னோக்கி கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையினை கொண்டுள்ள ஒரு நாட்டில் தான், எந்தவொரு பொருளானாலும் நுகர்வு அதிகமாக இருக்கும். ஆனால் இப்படி தொற்று நோய் மூலம் நாடே பதற்றத்தில் உள்ள நிலையில் நுகர்வு குறைந்துள்ளது. மேலும் தேவையும் குறைந்துள்ளது.

பயன்பாடு குறைவு

பயன்பாடு குறைவு

அந்த வகையில் சீனாவின் எரிபொருள் பயன்பாடானது வெகுவாக குறைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான சீனாவில் இறக்குமதி குறைந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. மேலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் இன்னும் பிரச்சனை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆயில் விலை மேலும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

தற்போது விலை எப்படி?

தற்போது விலை எப்படி?

இந்த நிலையில் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலையானது பெரிதளவில் மாற்றம் இன்றி 0.12% ஏற்றத்துடன் 51.62 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இதே பிரண்ட் கச்சா எண்ணெய் விலையானது 0.46% வீழ்ச்சி கண்டு 56.36 டாலர்களாக வர்த்தகமாகியும் வருகிறது. இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் பேரலுக்கு 27 ரூபாய் ஏற்றம் கண்டு 3,704 ரூபாயாக வர்த்தகமாகியும் வருகிறது.

விமான எரிபொருள் வீழ்ச்சி

விமான எரிபொருள் வீழ்ச்சி

சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உலக அளவில் பல நாடுகள் சீனாவிற்கு விமான போக்குவரத்தினை தடை செய்துள்ளன. அதே போல சீனர்களுக்கும் தற்காலிக தடை விதித்துள்ளன. இதனால் விமான போக்குவரத்து குறைந்துள்ளதால், விமான எரிபொருள் பயன்பாடும் குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது.

தொழில் துறைகளும் வீழ்ச்சி

தொழில் துறைகளும் வீழ்ச்சி

சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த தொற்று தாக்குதலால் அந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் சரி, அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் சரி வீழ்ச்சி கண்டுள்ளன. சொல்லப்போனால் பிபரவரியில் கொரோனாவின் தாக்கத்தால் சீனாவின் தொழில்துறை மிக மோசமாக பாதிக்கப்படக்கூடும், ஒரு பெரிய பொருளாதார வீழ்ச்சி உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உற்பத்தியும் வீழ்ச்சி

உற்பத்தியும் வீழ்ச்சி

சவுதி அரேபியா தலைமையிலான எண்ணெய் உற்பத்தி நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைப்பதற்கான ஒரு புதிய ஒப்பந்தத்தால், ஓபெக்கின் எண்ணெய் உற்பத்தி 2009ல் இருந்ததைப் போல குறைந்தது. இப்படி இருக்கும் நிலையில் சீனாவில் தேவை குறைந்துள்ளது. மேலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் போது, இது மேலும் விலை குறைப்பை தூண்டுமோ என்ற அச்சம் உற்பத்தியாளார்கள் மத்தியில் நிலவி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »