Press "Enter" to skip to content

நகை பிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி : ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.224 குறைந்து ரூ.31,152க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.31,152க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. ஜனவரி மாதம் முழுக்க விலையேற்றம் காணப்பட்ட நிலையில் இந்த மாதம் சற்று ஆறுதலாக விலை குறைந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.3,894க்கு விற்பனையாகி வருகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் சென்னயைில் வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ரூ.50.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 8ம் தேதி தங்கம் விலை ரூ.31,176 ஆக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இது தான் தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 1ம் தேதியன்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கிராமுக்கு ரூ.39 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,922க்கும், சவரனுக்கு ரூ.312 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 31,376க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் சவரன் ரூ.312 அளவுக்கு உயர்ந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், சனிக்கிழமையின் விலையிலேயே நேற்று தங்கம் விற்பனையானது. இந்த நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »