Press "Enter" to skip to content

போச்சு போச்சு.. இனி இந்த வரிச் சலுகைகள் எல்லாம் காலியா..?

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் நீண்ட நெடிய 2 மனி 40 நிமிட பட்ஜெட்டை, கடந்த பிப்ரவரி 01, 2020-ல் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் வெகு ஜன மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்த விஷயம் என்ன என்று கேட்டால் அது வருமான வரி தான்.

இதுவரை இந்தியாவில் ஒரே மாதிரியான வருமான வரி வரம்புகள் தான் இருந்தது. அதை இரண்டு வருமான வரி வரம்பாக மாற்றி இருக்கிறார்கள். அதில் சில வருமான வரிச் சலுகைகளையும் நீக்கி இருக்கிறார்கள் அதைப் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.

பழைய வருமான வரி வரம்புகள்

1 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை 0 % வரி

2.5 லட்சம் முதல் 5.0 லட்சம் வரை 5 % வரி

5.0 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20 % வரி

10 லட்சத்துக்கு மேல் 30 % வரி செலுத்த வேண்டும் என வரம்புகள் இருக்கின்றன.

புதிய வருமான வரி வரம்புகள்

புதிய வருமான வரி வரம்புகள்

1 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை 0 % வரி

2.5 லட்சம் முதல் 5.0 லட்சம் வரை 5 % வரி

5.0 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை 10 % வரி

7.5 லட்சம் முதல் 10.0 லட்சம் வரை 15 % வரி

10.0 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20 % வரி

12.5 லட்சம் முதல் 15.0 லட்சம் வரை 25 % வரி

15 லட்சத்துக்கு மேல் 30 % வரி செலுத்த வேண்டும்

ஆனால் 2 கண்டீஷன்

ஆனால் 2 கண்டீஷன்

1. மேலெ சொல்லி இருக்கும் பழைய வருமான வரி வரம்பு அல்லது புதிய வருமான வரி வரம்பு என எதை வேண்டுமானாலும் நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.

2. புதிய வரி வரம்புகளைத் தேர்வு செய்பவர்கள், சில வரி விலக்குகள் மற்றும் வரிச் சலுகைகளைப் பெற முடியாது.

எந்த வரிச் சலுகைகள்

எந்த வரிச் சலுகைகள்

மேலே சொன்னது போல, புதிய வருமான வரி வரம்புகளைத் தேர்வு செய்தால், எந்த மாதிரியான வரிச் சலுகைகள் மற்றும் வரி விலக்குகளைப் பெற முடியாது என நிதி மசோதாவில் சொல்லி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதைத் தான் கீழே விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

எடுத்துக் கொள்ள முடியாது

எடுத்துக் கொள்ள முடியாது

வீட்டு வாடகை,

வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் வட்டி,

நிலைக் கழிவு (Standard Deduction Rs.50,000),

கல்விக் கடனுக்கான வட்டி 80E,

ப்ரொஃபெஷனல் வரி,

பி எஃப், பி பி எஃப்

லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம்,

இ எல் எஸ் எஸ்,

ஹெல்த் இன்சூரன்ஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 80DD & 80 DDB சலுகைகள்,

நன்கொடை கொடுக்கும் தொகைக்கு வரிக் கழிவு 80G…

என பல வரிக் கழிவு மற்றும் வரிச் சலுகைகளையும் பெற முடியாதாம்.

சுருக்கமாக

சுருக்கமாக

இந்த பட்டியலை எல்லாம் கண்டு கொள்ளாமல், சுருக்கமாகப் பார்த்தால், வருமான வரிச் சட்டத்தில் அத்தியாயம் 6 அ (Income tax act chapter VI A)-ல் குறிப்பிட்டு இருக்கும் 80CCC, 80CCD, 80D, 80DD, 80DDB, 80E, 80EE, 80EEA, 80EEB, 80G, 80GG, 80GGA, 80GGC, 80IA, 80-IAB, 80-IAC, 80-IB, 80-IBA…etc போன்றவைகளைப் பெற முடியாதாம்.

எதை பெறலாம்

எதை பெறலாம்

80CCD சட்டப் பிரிவின் கீழ் என் பி எஸ் திட்டத்தில் போட்டும் பணத்துக்கு வரிக் கழிவு பெறலாமாம். அதே போல 80JJAA சட்டத்தின் கீழ் நிறுவனங்களும் சலுகைகளை பெறலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த புதிய வருமான வரி வரம்புகளை, ராதாரவி அண்ணாமலை படத்தில் சொல்வது போல “கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதே தான் வருகிறது” நடுத்தர மக்களுக்கு இந்த புதிய வரி வரம்புகளால் பெரிய லாபம் ஒன்றும் இல்லை என்று தான் தோன்றுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »