Press "Enter" to skip to content

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஹாலெப், முகுருஜா அரை இறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹாலெப் மற்றும் முகுருஜா ஆகியோர் அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

மெல்போர்ன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த ஒரு கால்இறுதி ஆட்டத்தில் 4-வது வரிசையில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா)- அனெட் கோண்டா விட் (எஸ்டோனியா) மோதினார்கள்.

இதில் ஹாலெப் 6-1,6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 53 நிமிட நேரமே தேவைப்பட்டது. 28 வயதான ஹாலெப் கடந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார். 2018-ம் ஆண்டு அவர் ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப் போட்டிக்கு தகுபெற்று இருந்தார்.

ஷிமோனா ஹாலெப் அரை இறுதியில் ஸபெயின் வீராங்கனை கார்பின் முகுருஜாவுடன் மோதுகிறார்.

32-வது வரிசையில் உள்ள அவர் கால் இறுதியில் 30-வது இடத்தில் உள்ள அனஸ்டரசியாவை (ரஷியா), 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

26 வயதான முகுருஜா முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். இரண்டு கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற (பிரெஞ்சு ஓபன் 2016, விம்பிள்டன்- 2017) அவர் இதற்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதிவரை (2017)நுழைந்து இருந்தார்.

இன்னொரு அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா)- சோபியா கெனின் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஐந்தாவது வரிசையில் இருக்கும் டொமினிக் தீம் (ஆஸ்திரேலியா) மோதுகிறார்கள்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »