Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியா ஓபன்: 4 மணிநேரம், 3 டை-பிரேக்கர், போராடி தோல்வியை சந்தித்தார் ரபெல் நடால்

மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை கடும் போராட்டத்திற்குப்பின் டொமினிக் தீம் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் ஐந்தாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்-ஐ எதிர்கொண்டார்.

முன்னணி வீரர்கள் இடையிலான ஆட்டம் என்பதால் தொடக்கம் முதலே ஆட்டம் பரபரப்பாக சென்றது. முதல் செட்டில் இருவரும் மாறிமாறி கேம்களை கைப்பற்றினர். இதனால் 6-6 என முதல் செட் சமனிலை பெற்றதால் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரில் டொமினிக் தீம் 7 (7) – 6(3) எனக் கைப்பற்றினார். முதல் செட் ஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் வரை நீடித்தது.

2-வது செட்டும் டை-பிரேக்கர் வரை சென்றது. இதில் டொமினிக் தீம் 7(7)-6(4) எனக்கைப்பற்றினார். இந்த செட் ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் வரை நீடித்தது.

தொடர்ந்து இரண்டு செட்டுகளை இழந்த நிலையில் அடுத்த செட்டையும் இழந்தால் தோல்வியடையும் நிலை ஏற்படும் என்பதால் ரபெல் நடால் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். இந்த செட் 42 நிமிடங்கள் நீடித்தது.

ஆனால் 4-வது செட்டில் டொமினிக் தீம் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடாலும் ஈடுகொடுத்து விளையாடியதால் ஆட்டம் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் டொமினிக் தீம் 7(8)-6(6) எனக்கைப்பற்றினார். இந்த செட் ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

இதன் மூலம் நான்கு மணி நேரம் 10 நமிடங்கள் போராடி ரபேல் நடாலை  வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் டொமினிக் தீம்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »