Press "Enter" to skip to content

இந்தியா தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு: போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோருக்கு இடமில்லை

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய கைல் ஜேமிசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹமிஷ் பென்னெட், ஸ்காட் குகெலின் ஆகியோர் 2017-க்குப் பிறகு அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன டாம் லாதமும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. கேன் வில்லியம்சன், 2. ஹமிஷ் பென்னெட், 3. டாம் பிளன்டெல், 4. கொலின் டி கிராண்ட்ஹோம், 5. மார்ட்டின் கப்தில், 6. கைல் ஜேமிசன், 7. ஸ்காட் குகலின், 8. டாம் லாதம், 9. ஜிம்மி நீசம், 10. ஹென்றி நிக்கோல்ஸ், 11. மிட்செல் சான்ட்னெர், 12. இஷ் சோதி, 13. டிம் சவுத்தி, 14. ராஸ் டெய்லர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »