Press "Enter" to skip to content

2வது டி20: பழி தீர்த்த இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் பரபரப்பான இறுதிக்கட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

டர்பன்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இதையடுத்து, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் பொறுப்புடன் ஆடி 40 ரன்னில் அவுட்டானார்.

மொயின் அலி 39 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 35 ரன்னிலும், மார்கன் 27 ரன்னிலும் அவுட்டாகினர். பென் ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 ரன் எடுத்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 3 விக்கெட்டும், பெலுகுவாயோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் அதிரடியாக ஆடினார். அவர் 22 பந்தில் 6 சிக்சர், 2 பவுண்டரி என 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பவுமா 31 ரன்னிலும், பிரெடோரியஸ் 25 ரன்னிலும், மில்லர் 21 ரன்னிலும் வெளியேறினார்.

வான் டெர் டுசென் தாக்குப்பிடித்து ஆடினார். அவர் இறுதிவரை போராடி 43 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். 

இறுதி ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. 4 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது, கடைசி 2 பந்தில் 2 விக்கெட் வீழ்ந்தது. இறுதியில், 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் கடந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து இந்த போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »