Press "Enter" to skip to content

இந்த நினைப்பு மட்டும் வரவேக்கூடாது: தேவையில்லாமல் அவுட்டான மயங்க் அகர்வால் சொல்கிறார்

வெலிங்டன் பேசின் ரிசர்வ் போன்ற கடினமான ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களுக்கு இந்த நினைப்பு மட்டும் வரவேக்கூடாது என்கிறார் மயங்க் அகர்வால்.

வெலிங்டனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்டில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். மதிய உணவு இடைவேளை 38 ஓவரில் 78 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

மயங்க் அகர்வால் 29 ரன்களுடனும், ரகானே 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி ஆகியோரின் ஸ்விங், கைல் ஜேமிசனின் பவுன்சர் பந்துகளை மயங்க் அகர்வால் நேர்த்தியாக எதிர்கொண்டார். ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.

விராட் கோலி அவுட்டாகும்போது 40 பந்தில் 9 ரன்கள் எடுத்திருந்தார். ரகானே வந்த பிறகு ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். மதிய உணவு இடைவேளையின்போது 67 பந்தில் 29 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி 20 ரன்களை 27 பந்தில் எடுத்திருந்தார். ரகானே 34 பந்தில் 19 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த நம்பிக்கையில் உணவு இடைவேளைக்குப்பின்னும் விளையாட விரும்பினார். இதனால் டிரென்ட் போல்ட் வீசிய பந்தை லேசாக திரும்பி புல்ஷாட் அடித்தார். ஆனால் பந்து லாங் லெக்கில் நின்ற ஜேமிசன் கையில் புகுந்தது. 84 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்குப்பின் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அதன்பின் ரகானே தேனீர் இடைவேளை வரை தாக்குப்பிடித்து விளையாடி 122 பந்தில் 38 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார். மயங்க் அகர்வால் தேவையில்லாமல் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் இந்தியாவின் ஆட்டம் வேறுமாதிரி இருந்திருக்கும்.

இந்நிலையில் இதுபோன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் ‘செட்’டாகி விட்டோம் என்ற எண்ணம் மட்டும் வந்துவிடக் கூடாது என்று மயங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மயங்க் அகர்வால் கூறுகையில் ‘‘இங்கு விளையாடும்போது வழக்கத்திற்கு மாறாக காற்று அதிகமாக வீசும்போது ஆடுகளம் மிகவும் கடினமாகி விடுகிறது என நினைக்கிறேன். அதற்கு ஏற்றபடி உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக அது எளிதானது அல்ல. குறிப்பாக இதுபோன்ற ஆடுகளத்தில் முதல் நாள் விளையாடுவது கடினம்.

ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் செட்டாகி விட்டோம் என்று நினைக்க முடியாது. ஏனென்றால், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கூட கொஞ்சம் கூடுதலாக ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது. கைல் ஜேமிசன் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். அவர் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தார். அதேபோல் அவர் நேர்த்தியான வகையில் பவுன்சர் பந்துகளை வீசினார். அவர் புது பந்தை பயன்படுத்திய விதம் அற்புதமானது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »