Press "Enter" to skip to content

முதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஜோகனஸ்பெர்கில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி.

ஜோகனஸ்பெர்க்:

ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் ஆடியது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 42 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 45 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது.

தென்ஆப்பிரிக்கா சார்பில் ஸ்டெயின், ஷம்சி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களமிறங்கியது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் சிக்கி மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறியது.

குறிப்பாக, ஆஷ்டன் அகர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன் 5 விக்கெட்டுகளையும் அள்ளினார். பாட் கம்மின்ஸ், சம்பா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா 14.3 ஓவரில் 89 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 107 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »