Press "Enter" to skip to content

விராட் கோலி கலந்து கொள்ள வேண்டும்: வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு விருப்பம்

டாக்காவில் நடைபெற இருக்கும் ஆசிய லெவன் – உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகளில் விராட் கோலி கலந்து கொள்ள வேண்டும் என பிசிபி விருப்பம் தெரிவித்துள்ளது.

வங்காளதேசம் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜுபுர் ரஹ்மானின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் வங்காளதேசம் ஆசிய லெவன் – உலக லெவன் அணிகளுக்கு இடையில் டாக்கா மைதானத்தில் இரண்டு டி20 போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணி இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும் மார்ச் 18-ந்தேதியில் இருந்து 22-ந்தேதிக்குள் இந்த இரண்டு போட்டிகளும் நடைபெறும் என வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆசிய லெவன் அணியில் விராட் கோலி இடம் பிடிக்க வேண்டும். இதுகுறித்து வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம் என பிசிசிஐ பதில் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து நான்கு வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘‘நாங்கள் அந்த நான்கு வீரர்கள் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நான்கில் இருந்து ஐந்து வீரர்களை அனுப்புவோம்’’ என்றார்.

இந்தியா நியூசிலாந்து தொடரை மார்ச் 4-ந்தேதியுடன் முடித்துக் கொண்டு இந்தியா வருகிறது. அதன்பின் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்கா தொடர் 18-ந்தேதிதான் முடிவடைகிறது.

18-ந்தேதி டாக்காவில் போட்டி தொடங்கினால் விராட் கோலியால் பங்கேற்க முடியாது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »