Press "Enter" to skip to content

ஒரேயொரு சோதனை: ஜிம்பாப்வே 256, வங்காளதேசம் 560 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்

டாக்காவில் நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதமும், மொமினுல் ஹக் சதமும் விளாசினர்.

டாக்காவில் வங்காளதேசம் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் எர்வின் (107) சதமும், தொடக்க வீரர் மஸ்வாயுர் (64) அரைசதமும் அடிக்க வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 265 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் வங்காளதேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 79 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹிம் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் விளாசினர். மொமினுல் ஹக் 132 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் முஷ்பிகுர் ரஹிம் சதத்தை இரட்டை சதமாக மாற்றினார்.

வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 560 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முஷ்பிகுர் ரஹிம் 203 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பின்னர் 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அந்த அணி இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »