Press "Enter" to skip to content

மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்- அப்ரிடி

மோடி என்ற ஒற்றை நபரால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது என அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இரு நாடுகளுக்கு இடையிலான  உறவு மேம்படாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அப்ரிடியிடம், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் மீண்டும் எப்போது நடக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அக்கேள்விக்கு பதிலளித்த அப்ரிடி இந்திய பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.  அப்ரிடி இதுகுறித்து பேசுகையில் ‘‘மோடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

இந்த நேரத்தில்தான் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஐசிசி தொடரை தவிர்த்து விளையாட ஒன்றிரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவிடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. மோடி சிந்திப்பதை இந்தியர்கள் உள்ளபட நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.  எதிர்மறை விஷயங்களை சார்ந்தே அவரது சிந்தனை இருக்கிறது.  ஒரே ஒரு நபரால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு  சிதைக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்பார்ப்பது இது இல்லை.

எல்லையில் இருபுறமும் உள்ள மக்கள்  இங்குள்ளவர்கள் அங்கேயும், அங்கே உள்ளவர்கள் இங்கேயும் பயணிக்க விரும்புகின்றனர். மோடி என்ன விரும்புகிறார், அவரது திட்டம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »