Press "Enter" to skip to content

கொரோனாவால் இங்கிலாந்தில் மனைவியின் உயிருக்கு ஆபத்து: நியூசிலாந்தில் தவிக்கும் முன்னாள் வீரர் அஞ்சுகிறார்

கொரோனா வைரசால் நுரையீரல் பாதிப்பால் இங்கிலாந்தில் உள்ள தனது மனைவியின் உயிருக்கு ஆபத்து என்று நியூசிலாந்தில் சிக்கியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பரிதாபமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் விமான போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் வசித்து வரும் நியூசிலாந்தின் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தற்போது நியூசிலாந்தில் சிக்கியுள்ளார். விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இங்கிலாந்தில் உள்ள மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சுகிறார்.

நியூசிலாந்தின் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் ஓ’பிரைன். இவர் தனது மனைவி, மனைவின் தாயார் (வயது 80) மற்றும் இரு குழந்தைகளுடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர் மென்டல் ஹெல்த் பிரச்சனை தொடர்பாக சிகிச்சை பெறுவதற்காக நியூசிலாந்து வந்துள்ளார். தற்போது கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவத்தால் இங்கிலாந்து திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தை காண முடியாமல் இருக்கும் ஓ’பிரைன் இதுகுறித்து சுறுகையில் ‘‘என்னுடைய மிகப்பெரிய கவலை என்னுடைய மனைவியின் நுரையீரல் கண்டிசனை குறித்துதான். ஒருவேளை கொரேனா வைரஸ் காரணமாக அவருக்கு சளி போன்ற ஏதாவது தொற்று ஏற்பட்டு விட்டால், அவரது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

இந்த வைரஸ் எனது மனைவியை கொன்றுவிடும். எனது இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது 80 வயது அம்மா ஆகியோரை அவர் கவனிக்க வேண்டியுள்ளது. மன அழுத்தத்தை அவரிடம் இருந்து விலக்க வேண்டிய நிலையில், தற்போது அவருக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்குவதாக உணர்கிறேன்.

விமானங்களை வாங்கும் அளவிற்கான வசதி இருந்த போதிலும், அவைகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மிகவும் கடினமான சூழ்நிலையாக இருக்கிறது. ஆனால், இதுகுறித்து நான் குற்றம்சாட்டவில்லை. இதைவிட மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறார்கள். இது என்னுடைய மனைவியின் உடல்நலம் குறித்து கவலைப்படுவதுதான். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தற்போதுதான் நியூசிலாந்து வந்துள்ளேன். கொரோனா வைரஸ் தொற்று மொத்தமாக அனைத்தையும் திருப்பி போட்டுவிட்டது” என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »