Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தல் – ஐ.பி.எல். போட்டி ரத்தாகிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல விளையாட்டுப் போட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஐ.பி.எல். போட்டி உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இந்த வைரஸ் காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்படுவதுமாக இருக்கின்றன.

இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ,பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான 13-வது போட்டி வருகிற 29-ந் தேதி முதல் மே மாதம் 23-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஏப்ரல் 15-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த மாதம் 14-ந் தேதி வரை இது அமலில் இருக்கும். இதனால் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. மே மாதத்தில் மட்டும் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. இதனால் போட்டியை ரத்து செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

எனவே ஐபிஎல் 20 ஓவர் போட்டி இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் கிரிக்கெட் வாரியம் இந்த வி‌ஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஏப்ரல் 15 ம் தேதிக்கு பிறகு இதுகுறித்த முடிவை எடுக்கும். ஐ.பி.எல். போட்டி ரத்து ஆனால் கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »