Press "Enter" to skip to content

கொரோனாவால் பாதிப்பு: ஏழை குடும்பங்களுக்கு உணவு, ஆடைகள் வழங்கிய வங்காளதேச கிரிக்கெட் வீரர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக மக்கள் திண்டாடி வரும் நிலையில் வங்காளதேச கிரிக்கெட் வீரர் நலிந்த குடும்பங்களுக்கு உணவு மற்றும் ஆடைகள் வழங்கி உதவி செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நலிந்த குடும்பத்தினர் மற்றும் தெருவில் வசிப்போர் உணவு இன்றி தவித்து வருகிறார்கள்.

வங்காளதேசத்தில் இப்படி கஷ்டப்படும் நபர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் மொசாடெக் ஹொசைன் உணவுகள் மற்றும் ஆடைகள் வழங்கி உதவியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும். இந்தத் தொற்றில் இருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறேன். என்னால் முடியும் அளவிற்கு நான் உதவி செய்கிறேன். ஒவ்வொருவரும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப ஏழை மக்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும்.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரசால் ஸ்தம்பித்துள்ளது. இதுபோன்ற மோசமான நெருக்கடியை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். 6 கோடி மக்கள் தொகை கொண்ட ஏழைநாடு உதவி இன்றி இருக்கிறது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »