Press "Enter" to skip to content

சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக், யூரோ 2020 தகுதிச்சுற்று கால்பந்து தொடர்கள் ஒத்திவைப்பு

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் அனைத்து கால்பந்து தொடர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று இத்தாலியில் அதிகரித்ததன் காரணமாக ‘செரி ஏ’ கால்பந்து லீக் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்குகளும் ஒத்திவைக்கப்பட்டன.

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் ஜூன் மாதத்திற்கு பிறகே நடைபெற இருந்ததால் போட்டி நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் கொரோனா வைரசுக்கு தினமும் 500-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் முதன்முறையாக இன்று 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக், யூரோ 2020 தொடருக்கான தகுதிச்சுற்று பிளே-ஆப்ஸ் ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »