Press "Enter" to skip to content

தன்னுடைய பந்துவீச்சு சுற்றில் மிகவும் பிடித்த சுற்று எது?: விவரிக்கிறார் ரகானே

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரகானே, தன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்தது எது? என்பதை விவரித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரகானே. மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினாலும் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். 31 வயதாகும் இவர் இருபது டி20, 90 ஒருநாள் மற்றும் 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்திய அணி இக்கட்டான நிலையில் தவிக்கும்போதெல்லாம் தனது சிறப்பான பேட்டிங்கால் அணியை காப்பாற்றியுள்ளார். பொதுவாக சுழற்பந்து வீச்சைவிட வேகப்பந்து வீச்சை சிறப்பாக விளையாடக் கூடியவர்.

தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் கிரிக்கெட் வீரர்கள் உரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்த இன்னிங்ஸ் குறித்து விவரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் 103 ரன்கள் விளாசியது, 2015-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 79 ரன்கள் அடித்தது சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.

லார்ட்ஸ் டெஸ்டில் ரகானே 154 பந்தில் 103 ரன்கள் விளாசினார். இந்தியா ஒரு கட்டத்தில் திணறியபோது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புவனேஷ்வர் குமார் உடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தார். இதனால் அணி சரிவில் இருந்து மீண்டது. 2-வது இன்னிங்சில் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீச இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்தது. தவான் 137 ரன்கள் அடித்த போதிலும், ரகானே 60 பந்தில் 79 ரன்கள் விளாசினார். தவான் – ரகானே ஜோடி 125 ரன்கள் குவித்தது. பின்னர் 308 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 177 ரன்னில் சுருண்டது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »