Press "Enter" to skip to content

மூன்று வருடம் வீட்டிற்கே போக மாட்டேன் என்கிறார் சுழற்பந்து வீச்சாளர் சாஹல்

ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள்யே இருக்கும் இந்த நாட்கள் மூன்று வருடத்திற்கு இணையானது என சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ந்தேதியுடன் 21 நாட்கள் முடிவடைகிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற்றபின் மூன்று வருடங்கள் வெளியே தங்க முடியும் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.

சாஹல் இதுகுறித்து கூறுகையில் ‘‘லாக்டவுன் முடிந்து நான் விட்டை விட்டு வெளியே சென்றபின், என்னுடைய விட்டுக்கு திரும்பமாட்டேன். இனிமேல் என்னால் வீட்டுக்குள் இதுபோன்று நீண்ட நாட்கள் இருக்க முடியாது. தற்போது வீட்டிற்குள் இருந்த நாட்கள் மூன்று வருடத்திற்கு இணையானது. பக்கத்தில் உள்ள ஓட்டலில் வசிக்க முடியும். ஆனால் வீட்டில் தங்க முடியாது. இதுதான் தற்போது என்னுடைய நிலை. லாக்டவுன் நாட்களை இனிமேலும் தாங்க முடியாது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »