Press "Enter" to skip to content

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நாம் நேர்மையை பற்றி பேசக்கூடாது: சல்மான் பட் சொல்கிறார்

மேட்ச்-பிக்சிங் சம்பவத்தில் ஐந்தாண்டுகள் தடைபெற்ற சல்மான் பட், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நாம் நேர்மையை பற்றி பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்ட வழக்கில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சல்மான் பட்டுக்கு ஐந்தாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.

தடைக்காலம் முடிந்த பிறகு மீண்டும் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் சர்வதேச அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் முகமது அமிர் அணியில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே வாழ்நாள் தடைவிதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டவர்களுக்கு அணியில் இடம் கொடுக்கக்கூடாது என்று முகமது ஹபீஸ் தெரிவித்திருந்தார். அதற்குமேலாக ஜாவித் மியான்தத் தூக்கிலிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நாம் நேர்மையை பற்றி பேசக்கூடாது என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சர்மான் பட் கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் இந்த விஷயம் குறித்து (மேட்ச்-பிக்சிங்) ஏன் பேசுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. ஏனென்றால் இது ஒரு பிரச்சனையே கிடையாது. ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இரண்டும்தான் அவர்கள் வகுத்துள்ள விதியின்படி பேச வேண்டும்.

அவர்களின் தொடர்புடைய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையிலும் அணியில் சேர்க்கப்பட்டனர். இது ஊழலில் இருந்து வேறுப்பட்டதாகுமா?. பாகிஸ்தான் கிரிக்கெடில் நாம் நேர்மைப் பற்றிக்கூட பேசக்கூடாது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »