Press "Enter" to skip to content

பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்த விரும்பவில்லை: ஏபி டி வில்லியர்ஸ்

ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அதற்கு தடையாக உள்ளது.

தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கு தென்ஆப்பிரிக்கா அணி தயாராகிக் கொண்டிருந்த நிலையில் திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதன்பின் உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் விளையாட விருப்பம் தெரிவித்ததாக விமர்சனம் எழும்பியது. பின்னர் முன்னணி வீரர்கள் ஓய்வு பெற தென்ஆப்பிரிக்கா அணி திணற ஆரம்பித்தது. இதனால் அக்டோபர் – நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் டி வில்லியர்ஸ் விளையாட விருப்பம் தெரிவித்தார்.

டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி திறமையை நிரூபித்தால் மீண்டும் அணிக்கு திரும்பலாம் என்று தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஆதரவு தெரிவித்திருந்தார். சுமார் இரண்டு மாதம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் திறமையை நிரூபித்து அணியில் இடம் பிடிக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டி20 உலக கோப்பை போட்டியும் நடைபெறுமா? என்று தெரியவில்லை.

இது ஏபி டி வில்லியர்ஸ்க்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்த விரும்பவில்லை என்ற ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘ஆறு மாதங்களை எதிர்காலத்திற்கு என என்னால் பார்க்க முடியவில்லை. இந்த தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டால் எல்லாவிதமான விஷயங்களும் மாறிவிடும். தற்போது அணியில் விளையாடுவதற்கான தகுதியுடன் இருப்பதாக உணர்கிறேன். ஆனால், அந்த நேரத்தில் என்னுடைய உடல்நிலை எப்படி ஒத்துழைக்கும் என்று தெரியவில்லை.

நான் விளையாட விரும்புகிறேன். ஆனால், நானாகவே அணியில் இடம்பிடிக்க முடியாது. பொறுப்பேற்றுக் கொண்டு பொய்யான நம்பிக்கையை உருவாக்க பயமாக உள்ளது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »