Press "Enter" to skip to content

இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் சென்ற மத்திய மந்திரி

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூட்டப்பட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

கொரோன வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் கடந்த மாதம் 3-வது வாரத்தில் அதிகரிக்க தொடங்கியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவுக்கு முன் சில அரசு சார்ந்த அமைச்சகங்கள் முக்கிய அலுவலக கட்டடங்களை மூடியது. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை வீட்டில் இருந்து வேலை செய்யக் கூறியது.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் முன்னெச்சரிக்கை காரணமாக கடந்த மாதம் 21-ந்தேதி மூடப்பட்டது. இந்நிலையில் இன்று இந்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தலைமை அலுவலகம் சென்றார்.

அங்கு அவர் முகக்கவசம் அணிந்து சென்றார். தலைமை அலுவலகத்தை திறந்தது குறித்து கிரண் ரிஜிஜு கூறுகையில் ‘‘விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த அலுவலகத்தை குறைந்த ஸ்டாஃப்கள் வைத்து நடத்த இருக்கிறது. ஏனென்றால் அலுவலக பணி நடைபெற வேண்டியுள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும் போன்றவை உறுதி செய்யப்படும்’’ என்றார்.

அனைத்து அமைச்சர்களும் அவர்களுடைய அலுவலகத்தை இணைச் செயலாளருக்கு இணையாக அதிகாரிகள் மற்றும் மூன்றில் ஒரு பங்கு ஸ்டாஃப்களுடன் திறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »