Press "Enter" to skip to content

ஆடுகளம் பிளாட்-ஆக இருந்தால் சோதனை கிரிக்கெட்டை எப்படி காப்பாற்ற முடியும்: நசீர் ஹுசைன் சொல்கிறார்

டெஸ்ட் போட்டி நிலைத்து நிற்க வேண்டுமென்றால் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் பிட்ச் தயாரிக்க வேண்டும் என நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட் பிரபலம் அடைந்த பின்னர் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் ஆதரவு குறைந்து வருகிறது. ஒரு கிரிக்கெட் வீரரின் திறமையை தெரிந்து கொள்ள டெஸ்ட் போட்டிதான் சிறந்தது என கூறப்பட்டு வந்தாலும் ரசிகர்கள் ஐந்து நாட்கள் மைதானத்திற்கு வருவதை விரும்பவில்லை.

டி20 கிரிக்கெட் போட்டி மூன்று மணி நேரத்திற்குள் முடிந்து விடுவதால் ரசிகர்கள் வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட் போட்டிக்கு வரவேண்டிய அவசியமில்லை. மாலை வேலை முடிந்து போட்டிக்கு வந்தால் போதுமானது.

கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் குறைவதால் ஐசிசி-க்கு போதுமான வருமானம் கிடைப்பதில்லை. மைதானங்களும் வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஆனால் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காப்பாற்ற பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக வகையில் ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நசீர் ஹுசைன் கூறுகையில் ‘‘கேம்பிரிட்ஜ் ஆடுகளத்தில் ஜிம்மி ஆண்டர்சன் 600 பந்துகளை சந்தித்து 90 ரன்கள் சேர்த்தார். இதுபோன்று ஆடுகளம் அமைக்கப்பட்டால் போட்டி ஆர்வமாக இருக்காது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் 300 ரன்களைத் தொட்டுதான் எடுக்கப்படுகிறது. பந்து வீச்சாளர்களுக்கு சற்று ஆதரவாக இருப்பதால் பார்ப்பது சிறப்பாகவும், ரசிகர்களுக்கு நல்ல அனுபவமும் இருக்கும். இங்கிலாந்து நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை மிகவும் அதிகவும். அதற்கு உண்டான மதிப்பை இந்த போட்டி கொடுக்கும்’’ என்றார்.

‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் மாற்றம் கொண்டு வரக்கூடாது. அதுபோல் ரசிகர்களிடம் ஆர்வத்தை கூட்ட பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துகிறார்கள். இதுவும் டெஸ்ட் போட்டியை ஊக்குவிப்பதாக இருக்காது’’ என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »