Press "Enter" to skip to content

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனாவுக்கு பலி

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் முதல்-தர கிரிக்கெட் வீரரான ஜாபர் சர்பராஸ் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் முதல்-தர கிரிக்கெட் வீரர் ஜாபர் சர்பராஸ் (வயது 50). இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக பெஷாவர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜாபர் சர்பராஸ் பெஷாவர் அணிக்காக 15 முதல்-தர கிரிக்கெட்டில் விளையாடி 616 ரன்கள் அடித்துள்ளார். 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி விளையாடி 96 ரன்கள் அடித்துள்ளார். 1988-ம் ஆண்டு அறிமுகம் ஆன ஜாபர் 1994-ல் ஓய்வு பெற்றார். அதன்பின் 2000-த்தில் பெஷாவர் அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.

இவர் பாகிஸ்தான் சர்வதேச அணிக்காக விளையாடிய அக்தர் சர்பராசின் சகோதரர் ஆவார். அக்தர் சர்பராஸ் கடந்த 10 மாதங்களுக்கு முன் புற்றுநோயால் மரணமடைந்தார்.

பாகிஸ்தானில் 5500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »