Press "Enter" to skip to content

பிரான்சில் ஜூன் மாதத்தில் மீண்டும் கால்பந்து போட்டிகள் தொடங்க வாய்ப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட லீக்-1 கால்பந்து லீக்கை ஜூன் மாதத்தில் தொடங்க அமைப்பாளர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக பாதிக்கப்பட்டதில் பிரான்சும் ஒன்று. கடந்த மாதம் முதல் வாரம் லீக்-1 கால்பந்து போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராததால் மே மாதம் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லீக்-1 கால்பந்து போட்டிகள் ஜூன் 3-ந்தேதி அல்லது ஜூன் 17-ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக லீக் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டிகள் ஜூன் 17-ந்தேதி தொடங்கினால் ஒவ்வொரு அணிகளும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மோதவேண்டும். அப்படி நடந்தால் ஜூலை 25-ந்தேதிக்குள் லீக்கை முடித்து விடலாம். ஆகஸ்ட் 2-ந்தேதிக்குள் வெளியேற்றுதல், பிளே-ஆஃப்ஸ்-க்கு முன்னேறுதல் ஆகியவற்றை முடித்துவிடலாம் எனத் திட்டமிட்டுள்ளது.

அதன்பின் ஆகஸ்ட் 23-ந்தேதி 2020-21 சீசனை தொடங்க திட்டமிட்டுள்ளது. ஆனால் பிரான்ஸ் கால்பந்து பெட்ரேசன்தான் இதுகுறித்து முடிவு செய்யும். 

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் – செயின்ட் எத்தியன் இடையிலான பிரெஞ்ச் கோப்பை இறுதி போட்டியை ஜூன் 27-ந்தேதியும், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் – ஒலிம்பிக் லியோனைஸ் இடையிலான லீக் கோப்பை இறுதிப் போட்டியை ஜூலை 11-ல் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »