Press "Enter" to skip to content

ஐந்து முதல் ஆறு ஐசிசி தொடர்களை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு திட்டம்

2023-ல் இருந்து 2031 வரை நடைபெற இருக்கின்ற சுமார் 20 ஐசிசி கிரிக்கெட் தொடர்களின் பொரும்பாலானவற்றை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது,

ஐசிசி 2023 முதல் 2031 வரையிலான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 20 சர்வதேச தொடர்கள் அடங்கும். இதில் பெரும்பாலான உலக கோப்பை தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி கூறுகையில் ‘‘உண்மையிலேயே ஐந்து முதல் ஆறு தொடர்களை நடத்த ஆர்வமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளோம். ஒன்று அல்லது இரண்டிற்கு மேல் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால், மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்த ஏலத்தில் கேட்ட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து நான் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு உடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளேன். ஆனால், ஒன்றிணைந்து நடத்துவற்கு ஒத்துழைப்பு அவசியம்.

சில தொடர்கள் 16 போட்டிகளை கொண்டது. சில தொடர்கள் 30 முதல் 40 தொடர்களை கொண்டது. ஆகவே, அளவு மற்றும் ஒர்க் லோடு ஆகியவற்றை கொண்டு பகிர்ந்து கொள்ள முடியும்.

மார்ச் 15-ந்தேதிக்குள் போட்டியை நடத்த ஆர்வம் உள்ளவர்கள் அதற்கு ஏல விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது. ஆனால் கொரோனா வைரசால் ஐசிசி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் ஐசிசி தொடர்கள் நடைபெற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு மிகக்பெரிய அளவில் உதவியாக இருக்கும்’’ என்றார்.

1996-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரை ஆசிய நாடுகள் இணைந்து நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »